பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் பெறுவதில் பிரச்னையா?: தொழில் அமைப்பினரிடம் நிர்மலா விசாரணை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் துறையினருக்கு வங்கிகள் கடன் தருகின்றனவா என்று தொழில் அமைப்பினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போனில் விசாரித்துள்ளார்.சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நாகராஜ் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் போனில் பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அவசர கால
nirmala sitharaman, bank loan, banking, நிர்மலாசீதாராமன், நிதியமைச்சர், வங்கிகடன், தொழில்அமைப்பு, விசாரணை

திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் துறையினருக்கு வங்கிகள் கடன் தருகின்றனவா என்று தொழில் அமைப்பினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போனில் விசாரித்துள்ளார்.

சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நாகராஜ் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் போனில் பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அவசர கால கடன் திட்டத்தில் 20 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளோம்; வங்கிகள் கடன் கொடுப்பதில் பிரச்னை உள்ளதா என விசாரித்தார். பெரும்பாலான தேசிய வங்கிகள் கொடுத்துவிட்டன. ஓரிரு தனியார் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. மீடியம் ஸ்கேல் துறையில் 250 கோடிக்கு ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த ஸ்கீமில் கடன் தருவதற்கு கடந்த ஒன்றாம் தேதி அறிவிப்பு வந்தாலும் ரிசர்வ் வங்கியிலிருந்து ஒப்புதல் வரவில்லை என்றேன்; ஆவன செய்வதாக உறுதியளித்தார். கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால் அமைச்சகத்துக்கு எழுதலாம் என்றார்.


latest tamil newsஅதேபோல 'டப்' ஸ்கீமில் (Technology Upgradation Fund Scheme) 80 சதவீதம் ஆய்வு முடித்த யூனிட்களுக்கு பாங்க் கியாரண்டி வாங்கிக்கொண்டு தொகையை விடுவிக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். சில வங்கிகள் பாங்க் கியாரண்டிக்கு அதற்கு சமமான தொகையை டிபாசிட் ஆகக் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்கு இந்த உதவி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பதையும் விளக்கினேன். இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவல் மற்ற நாடுகளை விட மிக குறைவாக இருக்கிறது என்பதை அனைத்துத் தூதரகங்களுக்கும் விளக்கி இப்போது சீனாவின் மீதுள்ள வெறுப்பு காரணமாக நமக்கு ஆர்டர் கிடைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கிறோம் என்றும் சொன்னார். இவ்வாறு நாகராஜ் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
26-ஜூலை-202007:59:54 IST Report Abuse
vnatarajan டெபாசிட்டை போட சொல்லி அதன்மேல் வங்கிகள் லீயின் மார்க் செய்து கடன் கொடுப்பதற்கு நிறுவனங்கள் ஏன் வங்கிக்கு கடன் வாங்க வரவேண்டும் டெபாசிட் போட முடியாத சிறு குறு நிறுவங்களின் புரொப்ரைட்டர் அல்லது பார்டின்னெர் அல்லது டைரக்டர் யாராவது வசதியானவர்களாக இருந்தால் அதாவது அசைய சொத்துக்கள் வைத்திருந்தால் அவர்களுடைய பெர்சனல் காரண்டீயை வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கலாமே. கோலாட்டரில் செக்கூரிட்டி இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்தாலும் கொடுக்கும்போது வாங்கி அதிகாரிகள் . பணததின் எண்டு யூஸை கவனிக்கவேண்டும். மேலும் பண்டு டைவேரஷன் இல்லாமல் தொடர்ச்சியாக வாங்கி அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் ஆகையால் சிறு குறு நிறுவனங்களிடமிருந்து பிராய் மரி சேகுரிட்டியைத்தவிர பெர்சநல் காரண்டீ மட்டும் வாங்கினால் போதும். அப்படிச்செய்தால் சிறு குறு நிறுவனங்கள் தைரியமாக வங்கியில் கடன் வாங்க முன் வருவார்கள் இது தவிர மார்க்கெட்டிங் ஆப் தி பிரோடுக்ட்ஸ் , கவர்ன்மென்ட் பாலிசி இவைகளை வாங்கி கருத்தில்கொண்டு லோன் வழங்கவேண்டும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
24-ஜூலை-202016:06:06 IST Report Abuse
Rengaraj இக்கட்டான சூழ்நிலைதான் இன்று. நம் கையிலிருந்து முதல் போட்டு தொழில் தொடங்கினாலும் விற்ற சரக்குக்கான பணம் திரும்ப வரும் வரும்வரைக்கும் நடைமுறை மூலதனம் தேவைப்படும். அது கிடைக்காமல் இருந்தால் கஷ்டம்தான். அதற்காக தொழிலே நடத்தாமல் இருக்க முடியாது. நிறைய பேர் தொழில் நடத்தினால்தான் இங்கே சிறிதுசிறிதாக வேலைவாய்ப்பு பெருகும். சிறுதொழிலை கண்டிப்பாக ஊக்குவிக்கவேண்டும். ஆனால் நிவாரணம் என்ற பெயரில் அவர்களின் திறமையை குன்றச்செய்யக்கூடாது என்பதால்தான் குறைந்த வட்டியில் தாராள கடன் வழங்கும் திட்டம் தேவைப்படுகிறது. வங்கிகள் அவர்கள் சொந்தப்பணத்தை கடன்வழங்குவதில்லை. மக்களின் சேமிப்புதான் இங்கே கடனாக உருவெடுக்கிறது. அதேபோல் அரசாங்கம் நிவாரணம் என்று வழங்க ஆரம்பித்தால் அது மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் என்றுதானே அர்த்தம்?. வங்கிகளின் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைந்து அனைவரும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி பெற்றால் மட்டுமே பொருளாதாரம் சீரடையும்.
Rate this:
S Nagarajan - Manama,பஹ்ரைன்
24-ஜூலை-202018:20:47 IST Report Abuse
S NagarajanWell said Rengaraj sir...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202011:59:58 IST Report Abuse
Lion Drsekar "வங்கி கடன் பெறுவதில் பிரச்னையா?" தொழில் புரிவதிதால் பிரச்னை, மிரட்டல், போற்றியாளர்களை ஊக்குவித்தல், 24 மணிநேரமும் முதல் போட்டு தொழில் புரிவோர்களை சமூக விரோதிகள் போல் பார்த்தால், நடத்தல் அரசியல் தொடர்புடைய சமூக விரோதிகள் அடிமைகளாக நடத்துதல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவைகள் எதுவும் இல்லாமல் நாட்டின் பொருளாதார முதுகெலும்பு, அவர்கள் இல்லையென்றால் நாட்டின் வளர்ச்சியே இல்லை என்று முன்னுரிமை கொடுத்து, சுதந்திரம் கொடுத்து கௌரவமாக நடத்தினால், நம் நாடு வளம் பெருகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X