வங்கி கடன் பெறுவதில் பிரச்னையா?: தொழில் அமைப்பினரிடம் நிர்மலா விசாரணை| In talks with banks to recast loans for companies: Sitharaman | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் பெறுவதில் பிரச்னையா?: தொழில் அமைப்பினரிடம் நிர்மலா விசாரணை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் துறையினருக்கு வங்கிகள் கடன் தருகின்றனவா என்று தொழில் அமைப்பினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போனில் விசாரித்துள்ளார்.சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நாகராஜ் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் போனில் பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அவசர கால
nirmala sitharaman, bank loan, banking, நிர்மலாசீதாராமன், நிதியமைச்சர், வங்கிகடன், தொழில்அமைப்பு, விசாரணை

திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் துறையினருக்கு வங்கிகள் கடன் தருகின்றனவா என்று தொழில் அமைப்பினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போனில் விசாரித்துள்ளார்.

சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நாகராஜ் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் போனில் பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அவசர கால கடன் திட்டத்தில் 20 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளோம்; வங்கிகள் கடன் கொடுப்பதில் பிரச்னை உள்ளதா என விசாரித்தார். பெரும்பாலான தேசிய வங்கிகள் கொடுத்துவிட்டன. ஓரிரு தனியார் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. மீடியம் ஸ்கேல் துறையில் 250 கோடிக்கு ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த ஸ்கீமில் கடன் தருவதற்கு கடந்த ஒன்றாம் தேதி அறிவிப்பு வந்தாலும் ரிசர்வ் வங்கியிலிருந்து ஒப்புதல் வரவில்லை என்றேன்; ஆவன செய்வதாக உறுதியளித்தார். கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால் அமைச்சகத்துக்கு எழுதலாம் என்றார்.


latest tamil newsஅதேபோல 'டப்' ஸ்கீமில் (Technology Upgradation Fund Scheme) 80 சதவீதம் ஆய்வு முடித்த யூனிட்களுக்கு பாங்க் கியாரண்டி வாங்கிக்கொண்டு தொகையை விடுவிக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். சில வங்கிகள் பாங்க் கியாரண்டிக்கு அதற்கு சமமான தொகையை டிபாசிட் ஆகக் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்கு இந்த உதவி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பதையும் விளக்கினேன். இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவல் மற்ற நாடுகளை விட மிக குறைவாக இருக்கிறது என்பதை அனைத்துத் தூதரகங்களுக்கும் விளக்கி இப்போது சீனாவின் மீதுள்ள வெறுப்பு காரணமாக நமக்கு ஆர்டர் கிடைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கிறோம் என்றும் சொன்னார். இவ்வாறு நாகராஜ் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X