பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Tarun Bajaj, RBI, banking, உள்நாட்டு தயாரிப்பு, 5 துறைகள், கூடுதல் சலுகை, தருண் பஜாஜ்

புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க ஐந்து துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் கூறியதாவது: மத்திய அரசு தற்சார்பு திட்டத்தின் கீழ் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் உள்நாட்டில் அலைபேசி தயாரிப்பை ஊக்குவிக்கவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டத்தை மேலும் ஐந்து துறைகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் உள்நாட்டில் தயாரிப்பு துறை மேலும் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இந்நிலையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அமெரிக்க நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீட்டின் பயன்கள் குறித்து விவரித்துள்ளார். அதுபோல உத்தரகண்ட் முதல்வர் டி.எஸ்.ராவத் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தில் தமது மாநிலத்தையும் சேர்க்குமாறு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் முயற்சி மற்றும் பல்வேறு ஊக்கச் சலுகைகள் காரணமாக வரும் மாதங்களில் அன்னிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
24-ஜூலை-202012:59:23 IST Report Abuse
Lakshmipathi S கங்கை நதி நீரை தென்மாவட்டங்கள்வரை கொண்டுவரும் சாத்தியக்கூறு பற்றி மக்களவையில் பொறியியல் வல்லுநர்கள் துணையோடு திட்டமிட்டால் நாட்டிற்கு நல்லது.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202016:45:21 IST Report Abuse
தமிழ்வேல் ஐயோ, திரும்பவுமா...இதுக்கு காங்கிங்கதான் தடை போட்டதுன்னு பதில் வரும்....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202012:10:26 IST Report Abuse
Lion Drsekar ஊரு விட்டு ஊர் சென்று தங்களின் வாழ்வாதாரங்களுக்காக தங்களை அர்ப்பணித்து செய்வது அறியாமல் இருக்கும் உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் போல் எல்லாவற்றையும் தியாகம் செய்து வரும் தொழிலார்களை வைத்துக்கொண்டு எல்லா நதிகளையும் ஒன்றாக இணைத்து விட்டால் வேறு என்ன வேண்டும் இந்த திருநாட்டில், மன்னர் ஆட்சியை ஒழித்தார்கள் காரணம் அவர்கள் காலங்களில் கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடமும் குறைந்தது 3000 ஆண்டுகள் வரை தரமாக இருக்கிறது, இப்படி இருந்தால் எப்படி பிழைப்பது என்று அவர்களை அறவே ஒழித்து அதே பரம்பரை மன்னர்கள் ஜனநாயகம் என்ற போர்வையில் ஆள்கிறார்கள், ஏதாவது ஒன்று தரமாக இருக்கிறதா ? குறை கூற விரும்ப வில்லை, மக்களுக்கு தேவை நாட்டின் வளன், பொருளாதார வளர்ச்சி, நம் நாட்டில் எல்லா செல்வங்களும் வளாகமாக இருக்கின்றன .ஒரே ஒரு குறை சுயநலத்தில் இயங்கும் பரம்பரை குடும்பங்கள், ஆகவே தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு முக்கிய பங்கு எல்லா நதிகளையும் ஒன்றாக இணைப்பது மட்டுமே, அபப்டி செய்தல் எல்லா செல்வங்களும் பெருகும், உலக அளவில் நம் நாடு சிறந்து விளங்கும், முக்கியமாக புலம் பெயர்ந்து வரும் தொழிலார்கள் மிக மிக உண்மையாக தரமாக உழைக்கிறார்கள், ஆகவே இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த திருநாட்டில் , எனவே அரசு முதல் கடமையாக எல்லா நதிகளையும் உடனடியாக இணைக்க வேண்டும், வேறு எந்த சலுகைகளும் வேண்டாம், நாங்கள் கதறும் குரல் அரசுக்கு கேட்க்குமா வந்தே மாதரம்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202016:43:38 IST Report Abuse
தமிழ்வேல் அவுங்க இப்போதைக்கு எல்லாத்தையும் வித்து காசு பார்க்கிறதுல மூழ்கி இருக்காங்களே.. இதெல்லாம் காதுல விழாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X