சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

கொரோனா வந்தால் தெளிவான சிந்தனை பிறக்குமா...

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
'கொரோனா வந்தால், குழப்பம் வராது; நல்ல தெளிவான சிந்தனை பிறக்கும். எனவே, கொரோனா நோயாளிகளை மறைமுகமாக சாடாதீர்கள்...' என, கண்டிக்கத் துாண்டும் விதத்தில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேட்டி:கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமைச்சர் தங்கமணி, மிகவும் குழம்பி உள்ளார். அவர், மற்றவர்களை குழப்ப வேண்டாம். மின் கட்டணத்தில் குளறுபடிகள் செய்தது அவர் தான்.'உங்கள் கோரிக்கை
கொரோனா, தெளிவான, சிந்தனை

'கொரோனா வந்தால், குழப்பம் வராது; நல்ல தெளிவான சிந்தனை பிறக்கும். எனவே, கொரோனா நோயாளிகளை மறைமுகமாக சாடாதீர்கள்...' என, கண்டிக்கத் துாண்டும் விதத்தில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேட்டி:

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமைச்சர் தங்கமணி, மிகவும் குழம்பி உள்ளார். அவர், மற்றவர்களை குழப்ப வேண்டாம். மின் கட்டணத்தில் குளறுபடிகள் செய்தது அவர் தான்.

'உங்கள் கோரிக்கை எல்லாம், மாவட்டத்திற்குள்ளேயே சுருங்கி விடும். அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய கோரிக்கையை நீங்கள் எழுப்பினால் எடுபடுமா...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி பேட்டி:

மத்திய அரசு மின்சார சட்ட திருத்தம் கொண்டு வருவதால், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்தாகும். எனவே, இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

'பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்களின், குறிப்பாக, தி.மு.க., - எம்.பி.,க்களின் செயல்பாடுகளை, தமிழக மக்கள் தான் நன்றாக பார்த்தனரே...' என, சூசகமாக சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேட்டி:


latest tamil news
பார்லிமென்டில் என் பங்களிப்பை, 'டிவி'களில் பார்த்திருப்பீர்கள். பா.ஜ., அரசின் மதவாத அரசியலையும், மாநிலங்களின் உரிமையை காக்கவும் கண்டித்து குரல் எழுப்பியுள்ளேன். தமிழக திட்டங்களுக்காகவும், இட ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளேன்.

'மதத்தின் பெயரில் எந்த பாகுபாடும் காட்டப்படக் கூடாது. அவ்வாறு காட்டினால், மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தே நிற்காது என்கிறீர்கள்; நல்ல கோரிக்கை தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி:

மத அடிப்படையில், கல்வியில் பாகுபாடு காட்டப்படுவது, மாணவ - மாணவியர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை போக்கும் வகையில், ஏழை ஹிந்து மாணவ - மாணவியருக்கும், கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். ஆடி பண்டிகை கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்டத்துக்கு, 5,000 டன் தானியங்களை அரசு வழங்கி, சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.

'அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல, மருத்துவ ஒதுக்கீடு பற்றி, அரசியல் தலைவர்களுக்கு என்ன கவலை; மாணவர்கள் தானே கவலைப்பட வேண்டும்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி அறிக்கை:

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், பா.ம.க., இட ஒதுக்கீடு கோரி, 27 வழக்குகள் தொடர்ந்திருப்பதால் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவரது அறியாமை, கவலை அளிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூலை-202010:26:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni சசியின் உறவுகளெல்லாம் கூடவே கல்லூரிகல வச்சுருக்கானுகலாமா? உப்புமா யுனிவர்சிட்டிலே எம் பீ ஏ டிக்ரீ வாங்கிப்புட்டு கற்றது என்னன்னா கொள்ளைகளை எப்படி மாட்டிக்காமலே சேர்ப்பது என்ற வித்தைகளேதான் சின் அம்மா துணையால்தான் அவ உறவுகளெல்லாம் கொடியே ..வாங்கி கோலிக்குறானுக
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூலை-202019:14:37 IST Report Abuse
Endrum Indian கொரோன கட்சி திமுக எம் எல் ஏ க்கள் நிறைய பேருக்கு வந்திருப்பதால் இப்படி உளறுகின்றார் கறுப்பர் கூட்டம் துறை முருகன்
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
24-ஜூலை-202018:54:46 IST Report Abuse
samvijayv கொரோனா வந்தால் தெளிவான சிந்தனை பிறக்குமா?., என்று தெரியாது ஆனால் நிருபர்களை, மக்களையும் மிக அருமையாக குழப்பவதில் முன்பு இருந்த தலைமையும், தங்களையும் மிஞ்ச வேறு ஆளு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X