சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நடைக்கு வேண்டாம் தடை

கொரோனா வைரஸ் பாதிப்பதற்கு முதியோருக்கு அதிக வாய்ப்புள்ளது. இதிலிருந்து பாதுகாக்க, அவர்களால் முடிந்தளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என பிரேசிலின் சாவ் பவுலோ பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசை பலவீனத்தை போக்குவதற்கு உடற்பயிற்சி அவசியம். ஒருநாளைக்கு 1500 'ஸ்டெப்புக்கு' குறைவாக ஈடுபவர்களுக்கு, அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களது கால் தசையில் உள்ள திசுவில் 4 சதவீதம் பலவீனம் ஏற்படுகிறது. இரண்டு வாரங்கள் உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால், தசையின் பலவீனம் 8 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்: தொழிலாளர் அமைப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகளில் ஒன்று. இது சர்வதேச தொழிலாளர் விதிமுறைகளை உருவாக்கி, சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்கியுள்ளது. இது 1919ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது. 150 நாடுகளில் இந்த அமைப்பை சேர்ந்த 2700 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதன் சிறந்த செயல்பாட்டுக்காக, 1969ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் தலைவராக கைய் ரைடர் இருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X