பொது செய்தி

இந்தியா

சுதந்திர தின கொண்டாட்ட வழிகாட்டுதல்: வெளியிட்டது மத்திய அரசு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Independence Day 2020, Independence day celebrations, digital independence day, pm modi, coronavirus, சுதந்திர தினம், கொண்டாட்டம், வழிகாட்டுதல்கள், வெளியீடு, மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி,


latest tamil news


*சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலை செய்யப்படும்.
*டில்லி செங்கோட்டையில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வில் ராணுவம் மற்றும் டில்லி காவல்துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமர் உரையாற்றுவார். அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும்.
* காலை 8 மணிக்கு மாநில அல்லது யூனியன் பிரதேச தலை நகரங்களில் முதல்வர் கொடி ஏற்றல், காவல்துறையினர், ஊரக காவலர்கள், என்சிசி, ஸ்கவுட், உள்ளிட்டோருக்கு விருது வழங்கல்,, முதல்வர் உரை, தேசிய கீதம் இசைத்தல்.
* கொரோனா பரவலால் மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
* கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை விழாவுக்கு அழைத்து கவுரவிக்கலாம். அதேபோன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலரையும் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202017:14:16 IST Report Abuse
தமிழ்வேல் கொரோனா விற்கு சேவை செய்து, கொரோனா தொற்றில் மரணமடைந்த ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், சுத்தம் செய்பவர்கள்...... இவர்களின் குடும்பத்தினரில் ஒருவரை அழைத்து கவுரவிக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X