செப்.,19- நவ.,8 வரை பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள்| IPL 2020 to begin on September 19; final on November 8 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

செப்.,19- நவ.,8 வரை பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
மும்பை: 13வது பிரிமியர் கிரிக்கெட் தொடரை செப்., 19 முதல் நவ.,8 வரை ஐக்கிய அரபு எமீரேட்சில்(யு.ஏ.இ.,) நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் மார்ச் 29-ம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் ‛டுவென்டி -20' உலக கோப்பை தொடர் கொரோனா
IPL, INDIAN PREMIER LEAGUE, ipl 2020, uae, CORONAVIRUS, COVID 19, இந்தியன் பிரிமியர் லீக், ஐபிஎல், யுஏஇ. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மும்பை: 13வது பிரிமியர் கிரிக்கெட் தொடரை செப்., 19 முதல் நவ.,8 வரை ஐக்கிய அரபு எமீரேட்சில்(யு.ஏ.இ.,) நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் மார்ச் 29-ம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் ‛டுவென்டி -20' உலக கோப்பை தொடர் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதால், பிரிமியர் தொடரை நடத்தி முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பிரிமியர் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19-ல் யு.ஏ.இ.,யில் துவங்கும் என ஐ.பி.எல்., தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதன் இறுதிப்போட்டி நவ., 8 அன்று நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த தொடரில் கூட்டத்தை அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி யு.ஏ.இ., அரசின் உத்தரவுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். எனினும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். இதில் இறுதி முடிவு அந்நாட்டு அரசின் கையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து யு.ஏ.இ., கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X