அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்ய செனட் குழு ஒப்புதல்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்தானதாக இருப்பதால், அமெரிக்க மத்திய அரசு ஊழியர்கள், அரசு சாதனங்களில் சீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.டிக் டாக் செயலியை மாதம்தோறும் பயன்படுத்தும் 2.6 கோடி மக்களில் 60% பேர் அமெரிக்காவைச் சேர்ந்த 16 முதல் 24 வயதுடையோர் என கடந்த ஆண்டு அந்நிறுவனம்
US, Senate Panel, Tik Tok, Ban, US Government Devices, us govt, chinese app, அமெரிக்கா, செனட்குழு, டிக்டாக், தடை, ஒப்புதல்

வாஷிங்டன்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்தானதாக இருப்பதால், அமெரிக்க மத்திய அரசு ஊழியர்கள், அரசு சாதனங்களில் சீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டிக் டாக் செயலியை மாதம்தோறும் பயன்படுத்தும் 2.6 கோடி மக்களில் 60% பேர் அமெரிக்காவைச் சேர்ந்த 16 முதல் 24 வயதுடையோர் என கடந்த ஆண்டு அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், 2017-ம் ஆண்டு சீனா அறிமுகப்படுத்திய ஒரு சட்டம், நாட்டின் தேசிய உளவுத்துறைக்கு சீன நிறுவனங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை உள்ளதாக கூறுகிறது. இதனால் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்நேரமும் தகவல்களை சீன அரசுக்கு தந்துவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டது.


latest tamil news


இதன் காரணமாக சமீபத்தில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. முன்னதாக அமெரிக்க செனட்டர்களும் டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஜோஷ் ஹவ்லி என்ற செனட்டர் கொண்டு வந்த 'அரசாங்க சாதனங்களில் டிக் டாக்கை தடை செய்யும்' சட்டம் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்களுக்கான செனட் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும்.

டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீது பரந்த அளவிலான தடையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இது போன்ற பிரச்னையை வருங்காலங்களில் தவிர்ப்பதற்காக டிக் டாக் தனது நிறுவன தலைமையகத்தை அமெரிக்கா அல்லது லண்டனிற்கு மாற்ற பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202014:40:25 IST Report Abuse
Chandramoulli இந்தியா வழியில் அமெரிக்கா. டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது சீனாவிற்கு எல்லோரும் ஆப்பு அடிக்க தொடங்கி விட்டனர். இதுதான் சரியான ராஜதந்திர பொருளாதார மரண அடி. இதுதான் சரியான சமயம். ஒட்டுமொத்த நாடுகளும் ஒன்று சேர்ந்து சீனாவை சித்திரவதை செய்து நசுக்க வேண்டும். கோரோனோ மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிய செய்தவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) மிகவும் சிறந்த முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X