பொது செய்தி

இந்தியா

விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும்: இந்திய தேர்தல் ஆணையம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ECI, By-elections, Assembly, Parliamentary Constituencies, ECI, Election Commission, india, தேர்தல் ஆணையம், விரைவில் இடைத்தேர்தல்,

புதுடில்லி: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு செப்.,7 வரை தேர்தல் நடத்த முடியாது என அறிவித்த நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 24) தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தமிழகம், பீஹார், உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம் என்ற விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட இருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை திட்டமிட்டிருந்த தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று (ஜூலை 23) தகவல் வெளியிட்டிருந்தது.


latest tamil news


இந்நிலையில், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, விரைவில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202019:47:23 IST Report Abuse
Bhaskaran கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத்தூக்கி மனயில்வை அப்படீங்கறக்கதையாக இருக்கு
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஜூலை-202017:53:14 IST Report Abuse
S. Narayanan கொரோனாவினால் வேலை இழந்தவர்களுக்கு இடை தேர்தல் மூலம் வருவாய் கிடைக்கும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202016:44:18 IST Report Abuse
Chandramoulli இடை தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள மக்கள் அல்லது வாக்காளர்கள் கொரானாவின் பிடியில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சமயத்தில் தி மு க ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்லது சகலருக்கும் 100000 வீதம் கொடுக்கலாம் . செலவு கணக்கை பிரசாந்த் கிஷோர் கணக்கில் வைத்து கொள்ளவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X