கவர்னர் மாளிகையில் ஆளும் காங்., எம்எல்ஏ.,க்கள் குவிந்தனர்| Dinamalar

கவர்னர் மாளிகையில் ஆளும் காங்., எம்எல்ஏ.,க்கள் குவிந்தனர்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (11)
Share
rajasthan, sachinpilot, ashokghelot, rajasthan, governor, rajasthanhighcourt, ராஜஸ்தான், அசோக்கெலாட், சச்சின்பைலட்,

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் அவரது 18 எம்.எல்.ஏ.,க்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இன்று மதியம் ஆளும் காங்., எம்எல்ஏ.,க்கள் முதல்வர் கெலாட்டுடன் கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஹரியானாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து தகுதி நீக்க நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், சபாநாயகர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று , சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பிற்கு முன்னர், இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்க்க வேண்டும் என சச்சின் பைலட் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டதால், தீர்ப்பு தாமதமாகியுள்ளது.

இந்த தீர்ப்பிற்கு நிருபர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் துவங்கும். எங்களிடம் மெஜாரிட்டி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். சட்டசபை துவங்கும் போது, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் அதில் பங்கேற்பார்கள். அவர்கள் இல்லாமலும் எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. சட்டசபைக்கு பெரும்பான்மையுடன் சென்று, அதனை நிரூபிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இதன் பின்னர் அசோக் கெலாட், கவர்னர் மாளிகை சென்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். சட்டசபையை உடனடியாக கூட்டக்கோரி, ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி சென்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X