'கொரோனா தீவிர பரவலை எட்டியுள்ளது': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

ஜெனீவா: கொரோனா சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news



சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை, 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.



latest tamil news



இந்த நிலையில் கொரோனா சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளதாவது:

ஒப்பீட்டளவில் கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. சிறிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. உலக அளவிலான மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு, 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது. அந்த நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்காமல் மக்களை காக்க மேலும் போராட வேண்டும்.


latest tamil news




மணிக்கு 2,000 பேர் பாதிப்பு!


குறிப்பாக, அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கவில் இதுவரை, 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. 3, 4வது இடங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-ஜூலை-202019:32:06 IST Report Abuse
M.COM.N.K.K. உங்கள் எச்சரிக்கையை உடைப்பில் கொண்டுபோய் போடுங்கள். உங்கள் எச்சரிக்கையும் நீங்களும்
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
24-ஜூலை-202019:13:47 IST Report Abuse
CSCSCS இப்போ கட்டுப்படுத்த முடியாத சூழலில் இவர் தினமும் அறிக்கைகளில் காட்டும் சுறு சுறுப்பு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் எங்கே போனது? அப்போதே இதை ஒழுங்காக செய்திருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காதே ?
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
24-ஜூலை-202019:09:56 IST Report Abuse
Rajagopal இவன் ஒரு குடுகுடுப்பைக்காரன் மாதிரி... WHO-வை முழுவதும் திருத்தி அமைத்து, நவீன உலகத்துக்கு தக்க விரைவாகவும், விவேகமாகவும் செயல்பட்டால் இந்த உலகத்துக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X