கிரெட்டாவின் இயக்கத்திற்கு பயங்கரவாத தொடர்பா?: நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீஸ்| Delhi Police withdraws anti-terror notice sent to environmental movement | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிரெட்டாவின் இயக்கத்திற்கு பயங்கரவாத தொடர்பா?: நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீஸ்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (19)
Share
Delhi Police, Withdraw, Anti Terror Notice, Environmental Movement, greta, டில்லி, போலீஸ், கிரெட்டா தன்பெர்க், பயங்கரவாதம், இயக்கம், நோட்டீஸ்

புதுடில்லி: ஸ்வீடன் சிறுமி கிரெட்டா தன்பெர்க் 'பிரைடேஸ் பார் பியூட்சர்' என்ற சுற்றுச்சுழல் இயக்கத்தை நடத்தி வருகிறார். இதன் இந்திய பிரிவு பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி உபா சட்டத்தின் கீழ் டில்லி சைபர் பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தியாவில் செயல்படுத்தப்படும் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை கட்டாயமாகும். நடைமுறையில் உள்ள அறிவிக்கையில் திருத்தம் செய்து, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2020 என்ற பெயரில் புதிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

இத்திருத்தம் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. கிரெட்டா தன்பெர்க்கின் இந்திய அமைப்பும் புதிய வரைவுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தது.


latest tamil news


சர்ச்சைக்குரிய அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொடர்சியாக மின்னஞ்சல்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் டில்லி சைபர் பிரிவு போலீசார், கிரெட்டா தன்பெர்க் அமைப்பு பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக, உபா சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பினர். அவர்களின் இணையதளங்களையும் முடக்கினர். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், தவறுதலாக உபா சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும், தற்போது அதனை திரும்ப பெற்று, ஐடி சட்ட பிரிவு 66-ன் கீழ் புதிய நோட்டீஸ் அளித்திருப்பதாகவும் டில்லி சைபர் பிரிவின் துணை கமிஷனர் அனீஷ் ராய் கூறியுள்ளார்.


latest tamil news


தங்கள் இணையதளம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2020-க்கு எதிராக பிரசாரம் செய்தது. அது தொடர்பான மக்களின் கவலைகளை அமைச்சகத்திற்கு அனுப்ப உதவியது. கிரெட்டா தன்பெர்க்கின் இந்தியப் பிரிவு குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்ட இயக்கம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் வரை தன்னார்வலர்களாக உள்ளனர். அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. இவ்வாறு 'பிரைடேஸ் பார் பியூட்சர்' அமைப்பு டுவீட் செய்துள்ளது. அதனை கிரெட்டாவும் மறு டுவீட் செய்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X