அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக 1,000க்கும் மேற்பட்டோர் பலி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் தொடர்ச்சியாக 3வது நாளாக, 1,100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 41.70 லட்சத்தைக் கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை, 1,47,333 ஆக உள்ளது. தற்போது 20.43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news




கடந்த மே மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க சுகாதார வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி, ஊரடங்கில் தளர்வுகள் அளித்தார் அதிபர் டிரம்ப்.

குறிப்பாக, உணவு விடுதிகள், வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன. கடற்கரைகளுக்கு மக்கள் வரத்து அதிகரித்தது.இதையடுத்து கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்காவின் 17 மாநிலங்களில் ஒரு நாள் மரண விகிதம் பல மடங்குகளாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பலியானோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்திருந்துள்ளது.


latest tamil news



கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, மொத்த பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை விகிதம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X