கோடீசுவரர் நடத்தும் கோசாலை.

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement




latest tamil news



புலந்த்ஷாஹர்,உத்திர பிரதேச மாநிலத்தின் மலை சார்ந்த கிராமங்களில் ஒன்று.

அங்குள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் வியர்வை சொட்ட சொட்ட ஒருவர் வேலை பார்த்தக் கொண்டு இருக்கிறார்,தொழுவத்தை சுத்தம் செய்வது ,விளக்குமாறு கொண்டு பெருக்குவது, தண்ணீர் விட்டு கழுவவுது,மாடுகளை குளிப்பாட்டுவது மற்றும் அவைகளுக்கு தீவனங்கள் வைப்பது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அவர் ஒரு சாதாரண தொழிலாளி என்று நினைத்தால் உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்


latest tamil news



ஆம் ஜூபைத்-உர்-ரஹ்மான் என்ற பெயர் கொண்ட அவர் ஒரு கோடீசுவரர்.

ஏக்கர் கணக்கில் விளை நிலம் இருக்கிறது,டில்லியில் பாத்திர தொழிற்சாலை வைத்துள்ளார் பணம் கொட்டும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.பிறகு எதற்கு இந்த மாட்டுத் தொழுவ வேலை என்று நீங்கள் கேட்பது புரிகிறது இதோ அவரே பதில் தருகிறார்.

எனது தாயார் ஹமீதுன்னிசா வாயில்லா ஜீவன்களிடம் எப்போதும் அன்பு பாராட்டுவார் அதிலும் அடிபட்ட ஆடு மாடு நாய்கள் போன்ற பிராணிகளை மருந்திட்டு காப்பாற்றி அனுப்புவார் மாடுகள் அதன் நோய் நீங்கி போகும் காலம்வரை தனது வீட்டருகே தொழுவம் அமைத்து சாப்பாடு போட்டு பார்த்துக் கொண்டார்.அவர் இருக்கும் வரை 25 மாடுகளை இப்படி பராமரித்து வந்தார் இறக்கும் தருவாயில் என்னைக் கூப்பிட்டு இவைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளணும் என்பதை மட்டுமே தனது கடைசி ஆசையாக சொல்லிச் சென்றார்.


latest tamil news



அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக மேலும் நிறைய மாடுகளை வாங்கி பராமரிக்க ஆரம்பித்தேன் அவைகள் என்னிடம் காட்டிய அன்பு காரணமாக அவைகளை நேசிக்க ஆரம்பித்தேன் இதன் காரணமாக உதவிக்கு வேலையாட்கள் இருந்தாலும் பெரும்பாலான வேலைகளை நானே செய்வதில் எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும்.

இப்போது என்னிடம் 65 மாடுகள் இருக்கின்றன .‛பாபன் மியான்' என்ற இந்த கோசாலை தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.மாதத்திற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவாகிறது.மாட்டின் பால் மூலம் பாதி செலவுக்கு பணம் வந்துவிடுகிறது மீதி என் கையில் இருந்து செலவு செய்து கொள்கிறேன் .

மாட்டின் பால் முழுவதையும் விற்றால் எனக்கு செலவே வராது ஆனால் மாட்டின் பாலில் பெரும்பகுதியை இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களின் தேவைக்கு இலவசமாக கொடுத்து விடுவேன் மீதத்தைதான் கடைகளுக்கு கொடுத்து விற்பேன்.

இந்துக்கள்தான் கோசாலை நடத்த வேண்டும் என்பது இல்லை மாடுகள் மீது பிரியம் கொண்ட யார் வேண்டுமானாலும் கோசாலை நடத்தலாம் எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் எதிர்ப்பு வந்தது ஆனால் இப்போது எனக்கு மட்டுமின்றி ஊருக்கே இந்த கோசாலைதான் பெருமை.மாடுகள் மீது கொண்ட பாசம் காரணமாக நானோ எனது குடும்பத்தினரோ மாட்டுக்கறி உண்பது கிடையாது.

எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் வந்து பார்க்கலாம் அதற்கு உணவு தரலாம். அம்மா, அம்மாவிற்கு பிறகு நான் என்று ஐம்பது வருடமாக நான் நடத்திவரும் இந்த கோசாலையை அடுத்து எடுத்து நடத்த என் மகன் உமரை தயார் செய்துவிட்டேன் எனக்கு இனி நிம்மதி என்று சொல்லி முடிக்கும் போது அவரது வார்த்தைகளில் அப்படி ஒரு சந்தோஷம்.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
31-ஜூலை-202010:33:41 IST Report Abuse
RaajaRaja Cholan இதை தான் சொல்வது மதத்தின் பெயரால் மனிதனை பிரிக்காதீர்கள் . மதம் வேறு மனிதம் வேறு, மத வெறியர்கள் மதத்தால் அரசியல் செய்பவர்கள் கீழ் பிறப்பு. மதத்தால் பிறரை வெறுப்பதும் குறை கூறுவதும் இழிபிறப்பே
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
30-ஜூலை-202023:49:47 IST Report Abuse
SIVA G  india இறையருள் எல்லா காலங்களிலும் பொழியட்டும்.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202003:42:59 IST Report Abuse
naadodi நல்லது செய்ய மதம் என்றுமே தடையில்லை.."தர்மோ ரக்ஷதி ரக்ஷித:" "அறம் காப்பாரை அறமே காக்கும்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X