'உலக வர்த்தகம் பாதிக்கும்; நிலையற்ற சூழலை இந்தியா பயன்படுத்த வேண்டும்': ரகுராம் ராஜன்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
நியூயார்க்: 'அமெரிக்கா - சீனா இடையே மோதல் அதிகரித்தால், உலக வர்த்தகம் பாதிக்கும். அந்த நிலையற்ற சூழலை இந்தியா பயன்படுத்தக் கொள்ள வேண்டும்' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 'மிச்சிகன் பான் ஐ.ஐ.டி., யு.எஸ்.ஏ.,' சார்பில், 'கொரோனாவுக்குப்பின் உலகப் பொருளாதார விதிகள்' எனும் தலைப்பில் மாநாடு நடந்தது. அதில், ரிசர்வ் வங்கியின்

நியூயார்க்: 'அமெரிக்கா - சீனா இடையே மோதல் அதிகரித்தால், உலக வர்த்தகம் பாதிக்கும். அந்த நிலையற்ற சூழலை இந்தியா பயன்படுத்தக் கொள்ள வேண்டும்' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.latest tamil news
'மிச்சிகன் பான் ஐ.ஐ.டி., யு.எஸ்.ஏ.,' சார்பில், 'கொரோனாவுக்குப்பின் உலகப் பொருளாதார விதிகள்' எனும் தலைப்பில் மாநாடு நடந்தது. அதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:

ஊரடங்கு மூலம் சில நாடுகள் இரண்டரை மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. ஆனால், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளால் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறன.
வர்த்தகத்திலும் உறுதியில்லாத சூழலை கொரோனா வைரஸ் உருவாக்கியிருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வருமா, ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் போன்ற கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஊரடங்கை மனதில் வைத்து, 50 சதவீதம் மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலுக்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆனால், வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில் போன்றவற்றில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள். வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் மிகக்குறைவுதான். ஆகவே, வளர்ந்துவரும் நாடுகளில் செயல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு விதிகள் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு வல்லரசுநாடுகளின் மோதல், சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற சூழலை உண்டாக்கும். இந்த காலச்சூழல் என்பது பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு முக்கியமான காலகட்டம். கொரோனா வைரசால் பொருளாதாரம் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தேவையை அதிகப்படுத்தி பொருட்கள் உற்பத்தியைப் பெருக்கி, மீண்டெழ இந்தசூழலை நன்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


latest tamil newsமேலும் அவர், 'இனிமேல், கல்விக்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தொழில்களிலும், நிறுவனங்களிலும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் அதிகமாக ஆட்டோமேஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும்' எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202015:19:57 IST Report Abuse
Rasheel போன் கால் மூலம் அரசியல்வ்யாதிகளுக்கு, அவர்களை சேர்ந்தவர்களுக்கு கடன் கொடுத்த நல்ல நபர். சிவகங்கை செட்டியாரின் அற்புதமான கண்டுபிடிப்பு. கொடுத்த கடன் பல லக்ஷம் கோடி. மௌன சிங்கத்தின் ஆசிர்வாதத்தில் முதலைகள் அடித்த வராக்கடன் கொள்ளை சில லக்ஷம் கோடி. வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
24-ஜூலை-202021:12:36 IST Report Abuse
திராவிஷ கிருமி காங்கிகளோட பொருளாதாரத்தை உயர்த்திக்கொடுத்தவன்...
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
24-ஜூலை-202020:25:31 IST Report Abuse
Ramona இவர் பதவியில் இருந்த காலத்தில் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை ,பதவி காலம் முடிந்த பின்னும் எதையாவது ஒரு பிட்டு போட்டு மொ,மோ,சி,கிட்டே போய் எப்படி நான் கேட்டேன் பாத்தீங்களாஎன்று சொல்ல, பிறகு அமெரிக்கா போய் டாலராக சம்பாதிக்க போய்விடுவார், இன்னிக்கு தான் ஒரு நல்ல துணுக்கு போட்டு இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X