2040ல் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மூன்று மடங்காக அதிகரிக்கும்| Plastic trash flowing into the seas will nearly triple by 2040 without drastic action | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'2040ல் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மூன்று மடங்காக அதிகரிக்கும்'

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு ஆகியவை மூன்று மடங்காக அதிகரிக்குமென புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக
Plastic Trash, plastic, Seas, plastic waste, கடல், பிளாஸ்டிக், கழிவுகள், கடல், மூன்றுமடங்கு

புதுடில்லி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு ஆகியவை மூன்று மடங்காக அதிகரிக்குமென புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வதேச திடக்கழிவு சங்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் தொலைத்தூர கடற்கரைகளில் முகக்கவசம் மற்றும் கையுறைகள் கலப்பது தினமும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆன்லைன் டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் உணவு கொள்கலன்கள் எண்ணிக்கை நிலப்பரப்பில் அதிகரித்து வருகிறது.

தி பியூ சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிஸ்டெமிக்கை சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ள புதிய ஆராய்ச்சி மூலம் கடலுக்குள் நுழையும் பிளாஸ்டிக்கின் அளவை 80 சதவீதத்திற்க்கும் குறைக்க கூடிய தீர்வுகள் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் நெருக்கடியை தடுப்பதற்கான வரைபடம் விரிவான ஒன்றாக கருதப்படுகிறது.


latest tamil newsஎந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், ஒவ்வொரு ஆண்டும் கடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக்கின் அளவு 11 மில்லியன் டன்னிலிருந்து 29 மில்லியன் டன்னாக உயரும். இது 2040ம் ஆண்டில் 600 மில்லியன் டன் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருகும். இது 3 மில்லியன் நீல திமிங்கலங்களுக்கு சமமான எடை ஆகும் என சயின்ஸ் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு என்பது அனைவரையும் பாதிக்க கூடிய ஒன்று. இது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல. இது அனைவரின் பிரச்சினையாகும் என்று பியூவின் மூத்த மேலாளரும், ஆய்வின் இணை ஆசிரியருமான வின்னி லாவ் கூறினார்.

நாம் எதுவும் செய்யாவிட்டால் அது மிகவும் மோசமான நிலையை எட்டும். பிளாஸ்டிக் உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை மாற்றுப் பொருட்களை நோக்கி திருப்புதல், மறுசுழற்சி செய்யும் வசதிகள் மற்றும் வளரும் நாடுகளில் கழிவு சேகரிப்பு விரிவாக்கம் ஆகியவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எரிசக்தி துறையை திருப்பிவிட வேண்டும். இது பிளாஸ்டிக் உற்பத்தியை அதிகரிக்க உலகெங்கிலும் புதிய ரசாயன ஆலைகளை விரைவாக உருவாக்கி வருகிறது. ஏனெனில் அதன் பாரம்பரிய எரிபொருள் வணிகம், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களின் உயர்வால் அழிக்கப்படுகிறது.


latest tamil news
பிளாஸ்டிக் உற்பத்திக்கு யார் காரணம் ?

கடந்த 1950ம் ஆண்டு உலகளவில் 2 மில்லியன் டன் என துவங்கிய பிளாஸ்டிக் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2017ல் 348 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2040ம் ஆண்டு இருமடங்காக அதிகரிக்குமென எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எக்ஸான்மொபில், டவ் மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் உள்ளிட்ட பெரிய பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், உற்பத்தியை அதிகரித்த போதிலும், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கையாள்வதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் கழிவுகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துகின்றன.

பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்கவும், மாற்று பொருட்களை ஊக்குவிக்கவும் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக அரசாங்கங்கள் சட்டங்களை அமல்படுத்த ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடையை நீக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் மிகப்பெரிய நிறுவனங்களான கோகோ கோலா, பெப்ஸிகோ, நெஸ்லே, யூனிலீவர் உள்ளிட்ட நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள், எதிர்காலத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக உறுதி அளித்துள்ளன.


latest tamil news


ஆனால் தற்போதைய அரசாங்க மற்றும் கார்ப்பரேட் உறுதியின்படி, 2040ம் ஆண்டில் கடலில் பாயும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை 7 சதவிகிதம் மட்டுமே குறைக்கும் என்று பியூ மற்றும் சிஸ்டெமிக் ஆய்வு கண்டறிந்துள்ளது. கடலில் 80 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக காகிதம் அல்லது மாற்று பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விட இரு மடங்கு அதிகமாக பயன்படுத்த வேண்டுமென ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரியூட்டுதல், ரசாயன மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக்கை எரிபொருள் ஆலைகளை கழிவுகளை அகற்றுவதற்கான வழிகள் என ஆய்வில் இடம்பெற்றுள்ளதை சிலர் விமர்சித்துள்ளனர். இந்த முறைகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வெப்பமயமாதல் கார்பன் உமிழ்வு வெளியீட்டையும், பிளாஸ்டிக் உற்பத்தியைத் தக்கவைக்க உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X