பொது செய்தி

இந்தியா

தனிமைபடுத்தலில் இருந்த ஐஐஎம் பெங்களூரு மாணவர்கள்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பெங்களூரு: பெங்களூரு ஐஐஎம் மாணவர்களின் 95 பேரின் 14 நாள் தனிமை முடிந்துவிட்டதாக, அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார். 95 பேரில் 35 பேர் இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ., மாணவர்கள். 60 பேர் மேலாண்மையில், நிர்வாக பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் ஆவார்கள்.கடந்த ஜூன் மாத இறுதியில், மையத்திற்கு மாணவர்கள் வந்தனர்.

ஐஐஎம் வளாகத்தில் மேலாண்மை வளர்ச்சி மையம்(எம்டிசி) உள்ளது. அங்கு ஓட்டல் உள்ளவை போன்ற வசதிகளுடன் கூடிய 120 அறைகள் உள்ளன. கடந்த ஜூன் மாத இறுதியில், வந்த 95 பேரும், எம்டிசி.,யில் தனிமைபடுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக ஐஐஎம் இயக்குநர் ரிஷிகேஷா டி.கிருஷ்ணன் கூறுகையில், மாணவர்களில் பலருக்கு வீடுகளில் இணையதள பிரச்னைகள் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை . சிலர் வேலையை விட்டுவிட்டு ஒராண்டு படிப்பை படிக்க வந்தனர். இதனால், அவர்கள் வளாகத்திற்குள் அனுமதித்தோம். தற்போதைய நிலையில், இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ, மற்றும் வீடுகளில் இணையதள பிரச்னைகளை உள்ளவர்களை தவிர வேறு யாரையும் வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டவர்கள், விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இங்கு வந்த 95 பேரும், மாநில அரசின் உத்தரவுப்படி இரண்டு வார தனிமைபடுத்தலை முடித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் தனிமைபடுத்துவதற்கு முன்னர், அங்கு வந்த அரசு அதிகாரிகள் அந்த மையத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்கினர். எம்.பி.ஏ., படிக்கும் 35 பேர் விடுதியை விட்டு வெளியேறுவதற்கு அனுமதியில்லை. மற்ற 65 பேரும் ஐஐஎம் ஏற்பாடு செய்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X