பீஜிங்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நாளுக்குநாள் மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் பரப்பியதாக முன்னதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. மேலும் ஹாங்காங்கை கையகப்படுத்துதல், பொருளாதார மோதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சீனாவுடன் அமெரிக்கா தொடர்ந்து மோதி வந்தது. கடந்த ஒரு வாரமாக சீனா-அமெரிக்கா மோதல் முற்றிவருகிறது. நேற்று அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் இருந்து சீனாவின் வர்த்தக கட்டடம் காலி செய்யப்பட்டது. மிகக்குறைந்த காலக்கெடுவுக்குள் பன்னாட்டு தலைமையகமான ஹவுஸ்டனில் இருந்து அமெரிக்கா, சீனாவை வெளியேற வலியுறுத்தியது.

இதனையடுத்து அமெரிக்காவைப் பழிவாங்கும் நோக்கில் தற்போது சீனா ஓர் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் செங்க்டு மாகாணத்தில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. இதனை உடனடியாக காலி செய்ய சீன வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகத்தில் நடக்கும் அலுவலக செயல்களை உடனடியாக நிறுத்தும்படி சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா சர்வதேச ஒப்பந்தத்தை மீறி ஹவுஸ்டன் சீன தலைமையகத்தை காலிசெய்யச் சொல்லியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் சங் கூறுகையில் அமெரிக்க கான்சலேட் அனாவசியமாக சீனாவின் உள்துறை விஷயங்களில் அடிக்கடி தலையிட்டது. இதன் தொடர்ச்சியாகவே சீன உள்துறை இந்த முடிவை எடுத்துள்ளது என விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்கா கொதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா விரைவில் வலியுறுத்தும் என காட்டமாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இவர்களது மோதல் எங்கு போய் முடியப்போகிறது எனத் தெரியாமல் உலகநாடுகள் குழம்பி நிற்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE