பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 6,785 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 24) புதிய உச்சமாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,729 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,729 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 56 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 114 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 56) மூலமாக, இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 019 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,137 பேர் ஆண்கள், 2,648 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,21,389 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 78,337 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 ஆக உள்ளது.


latest tamil news



இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 10,006 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,64,995 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 24 ஆயிரத்து 748 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
24-ஜூலை-202019:14:37 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் சரக்கின் பலன் இப்போது தெரிகிறது. மது சிகரெட்,கஞ்சா, குட்கா பீடா சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தாக்குதல் வேகம் அதிகமாகவும் சாவும் சீக்கிரம் வரும்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
24-ஜூலை-202018:51:37 IST Report Abuse
Nathan கவர்மென்டும் என்னதான் செய்வார்கள்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X