தமிழகத்தின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 424 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 378 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், தூத்துக்குடியில் 313 பேருக்கும், கன்னியாகுமரியில் 266 பேருக்கும், தேனியில் 234 பேருக்கும், ராணிப்பேட்டையில் 222 பேருக்கும், திருச்சியில் 217 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு
இன்று சென்னையில் 22 பேரும், மதுரையில் 10 பேரும், விருதுநகரில் 6 பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலியில் தலா 4 பேரும், திண்டுக்கல், ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், தென்காசி, தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் என 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,110 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 609 பேரும், மதுரையில் 483 பேரும், திண்டுக்கலில் 479 பேரும், விருதுநகரில் 454 பேரும், தூத்துக்குடியில் 432 பேரும், கன்னியாகுமரியில் 347 பேரும், திருவண்ணாமலையில் 315 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE