பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 3,000த்தை நெருங்கும் பாதிப்பு; 27ம் தேதி வரை முழு ஊரடங்கு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும், 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வராமாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும், 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வராமாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,966 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news




27ம் தேதி வரை முழு ஊரடங்கு!


கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவையில் நாளை (25ம் தேதி) மாலை 5:00 மணி முதல் 27ம் தேதி காலை 6:00 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X