ஆப்கன் இந்துக்களை அகதிகளாக ஏற்க வேண்டும்: டிரம்புக்கு கோரிக்கை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Afghan, Sikhs, Hindus, India, US, Congressman, Seeks, Refugee, Status, ஆப்கானிஸ்தான், சீக்கியர்கள், ஹிந்து, இந்து, இந்தியா, அகதிகள், கோரிக்கை

வாஷிங்டன்: பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை, இந்தியாவைப் போன்று அகதிகளாக ஏற்க வேண்டும் என அமெரிக்க எம்.பி., ஒருவர் டிரம்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல்கள் நடத்தினர். இதனால் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இந்தியா தான் பாதுகாப்பானது என கருதி, இங்கு குடியேற உதவி கேட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விசாக்களை இந்தியா வழங்கி வருகிறது என வெளியுறவு அமைச்சகம் நேற்று (ஜூலை 23) தெரிவித்தது.


latest tamil news


இந்துக்கள் மற்றும் சீக்கிய உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று வருகிறோம். அவர்கள் இங்கு குடியேற விரும்புகிறார்கள். தற்போதைய கொரோனா நிலைமையிலும், அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்தியாவில் குடியேற விரும்புவோர் நாட்டிற்கு வந்தவுடன், அவர்களின் கோரிக்கைகள் ஆராயப்பட்டு, தற்போதுள்ள விதிகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுத்துவோம். இவ்வாறு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

இந்தியாவின் இந்த அறிவிப்பை, அமெரிக்க எம்.பி., ஜிம் கோஸ்டா பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானின் சீக்கிய மற்றும் இந்து சமூகங்களை பயங்கரவாதிகளின் அழிவுக்கரங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை. இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட காலத்திற்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்னும் பல உதவிகள் செய்யப்பட வேண்டும்.

இந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் நிரந்தர தீர்வுகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அவர்களுக்கு இதேபோன்ற அகதி அந்தஸ்தைக் கோரி வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஒரு காலத்தில் சீக்கியர்களும், இந்துக்களும் 2,50,000 எண்ணிக்கையில் இருந்தனர். தொழில்துறையிலும், அரசில் உயர் பதவிகளையும் வகித்தனர். ஆனால் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் பயங்கரவாதிகளின் அடக்குமுறையால் ஆயிரத்துக்கும் குறைவான மக்களே தற்போது வாழ்கின்றனர். பலரும் போர் மற்றும் துன்புறுத்தல்களால் இந்தியா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். கடந்த மாதம் அமெரிக்காவின் இருகட்சியைச் சேர்ந்த 20 செனட்டர்கள் இந்த இரு சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு அவசர அகதி பாதுகாப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202021:51:37 IST Report Abuse
Rasheel ஒரு மார்கமாகத்தான் இருக்கானுங்க அடுத்தவன் ரத்தத்திலும் கொலையிலும் வாழும் மார்கமாக தான் உள்ளனர்
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
24-ஜூலை-202021:19:39 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) எந்த அளவிற்கு அமெரிக்காவில் இந்துக்களும் இந்தியர்களும் உள்ளார்கலோ, அந்த அளவிற்கு இந்தியாவிற்கு நன்மை. இங்கிலாந்தில் பல பாகிஸ்தான் வம்சாவளியினர் அரசியலில் உள்ளதால் அங்கே அவர்கள் பேச்சு எடுபடுகிறது.
Rate this:
Cancel
24-ஜூலை-202020:20:15 IST Report Abuse
kulandhai Kannan இப்போது புரிகிறதா CAAவின் நன்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X