சீனாவின் ஆர்.என்.ஏ கொரோனா தடுப்பு மருந்து பலன் அளிக்குமா?

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
China, CoronaVaccine, AnimalTests, Covid-19, Vaccine, சீனா, கொரோனா, வைரஸ், தடுப்பு மருந்து, ஆர்என்ஏ

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தியாவில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் சீனாவும் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது.


latest tamil news


பயான்டெக் மற்றும் ஹிசார் நிறுவனத் தடுப்பு மருந்துகள் போலவே இந்த தடுப்பு மருந்தும் செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடுப்பு மருந்து சீன ராணுவத்தினர் இடையே சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது. இது வெற்றிபெற்றால் கொரோனாவை உலகிற்குப் பரப்பிய சீனாவே அதற்கு தடுப்பு மருந்தை உருவாக்கிய பெருமையைப் பெறும்.

ஏஆர்சிஓபி (ARCoV) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து, குரங்கு மற்றும் எலிகள் ஆகியவற்றின் உடலில் செலுத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் 'செல்' எனப்படும் மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பு மருந்து விலங்குகள் உடலில் செலுத்தப்பட்ட பின்னர் அவற்றின் உடலில் உள்ள டி செல்களின் செயல்பாடு விஞ்ஞானிகளால் நுட்பமாக கண்காணிக்கப்பட்டது.


latest tamil news


ஆனால் இந்தத் தடுப்பு மருந்தின் வீரியம் குறித்து சந்தேகம் எழுகிறது. இது பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தப்பட்ட பின்னர் எவ்வளவு மணி நேரம் வைரஸை எதிர்த்துப் போராடும், எந்த அளவுக்கு வீரியமாகச் செயல்படும் என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. 25 சென்டிகிரேடு வெப்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து முழு ஆற்றலுடன் செயல்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்து இந்த கால நிலையிலேயே முழு ஆற்றலுடன் இருக்கிறது. ஒருவேளை தட்பவெட்பம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ இதன் வீரியம் மாறுபடலாம். ஆக இந்தத் தடுப்பு மருந்து வெற்றி பெற்றாலும் இதனை உலக நாடுகளுக்கு அனுப்பும்போது காலநிலை மாற்றத்தால் இதன் வீரியம் குறைய வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-ஜூலை-202019:36:27 IST Report Abuse
M.COM.N.K.K. கண்டிப்பாக பலன் அளிக்க வாய்ப்பே இல்லை காரணம் உலகநாடுகளுக்கு அனுப்பும்போது காலநிலை மாற்றத்தால் மருந்திற்கு வீரியம் குறையும் வாய்ப்புள்ளது என்று சொல்லும் போதே தெரிகிறதே இது டுபாங்கூர் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X