சபையை கூட்ட விடாமல் கவர்னருக்கு நெருக்கடி: முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

ஜெயப்பூர்: சட்டசபையை கூட்ட விடாமல் மேலிடத்தில் கவர்னருக்கு நெருக்கடி தரப்படுகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.



latest tamil news



ராஜஸ்தானில் ஆளும் காங். முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் 18 அதிப்தி எம்.எல்.ஏ.க்களுடன் போர்கொடி தூக்கினார். இதையடுத்து சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினர். இது தொடர்பாக கோர்டில் வழக்கு நடந்து வருகிறது.

நேற்று இரவு முதல்வர் கெலாட் , கவர்னர் கல்ராஜ்ஸ்மிஸ்ராவை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதன் மீது கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கவர்னர் மாளிகை முன் கொலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணாவில் இறங்கினார்.


latest tamil news




இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டி, என்னிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுஉள்ளது. வரும் ஜூலை 27-ம் தேதி சட்டசபை கூட்ட முடிவு செய்து உள்ளோம். பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பளித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சட்டசபை கூட்ட உத்தரவிட வேண்டும் என நேற்று இரவு கவர்னரை சந்தித்து கடிதம் மூலம் வலியுறுத்தினேன். இன்று தொலை பேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தேன். அவரிடம் இதுவரை பதில் எதுவும் வரவில்லை. சபையை கூட்ட விடாமல் அவருக்கு அரசியல் ரீதியாக மேலிடத்தில் நெருக்கடி கொடுக்கின்றனர் என்றார்.


ஜனாதிபதியிடம் மனு



இந்நிலையில் சட்டசபை கூட்டுவது தொடர்பாக டில்லி சென்று ஜனாதிபதியிடம் முறையிட முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ராஜ்ஸ்தான் அரசியலில் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
24-ஜூலை-202020:35:08 IST Report Abuse
Natarajan Ramasamy இந்த வழி புதியது அல்ல . பல முறை பார்த்தது. காங்கிரஸ் எவ்வளவு மந்திரிசபைகளை களைத்து அனுபவசாலி. பொதுமக்களுக்கு இது பார்த்து பார்த்து புளித்த ட்ராமா
Rate this:
Cancel
24-ஜூலை-202020:33:39 IST Report Abuse
chandran, pudhucherry உனக்குத்தான் பெரும்பான்மை இருக்கில்ல ஏன் பயப்படற. கொரணா வேலைய பாரு. எந்த மாநிலத்திலும் சட்டசபை கூட்டல இன்னும்
Rate this:
Cancel
24-ஜூலை-202020:09:39 IST Report Abuse
ஆரூர் ரங் அய்யோ பாவம் கவர்னர். கொரோனா நேரத்தில் 200 பேரைக் கூட்டி பல இடைத்தேர்தல்களுக்குக் காரணமாகும் பாவத்தை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார். கெஹ்லாட் தப்லீக்கிடம் ஐடியா கேட்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X