தாய்லாந்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
thailand, youths, dissolve, rule, prime minister, தாய்லாந்து, இளைஞர்கள், ஆட்சி கலைக்க, கோரிக்கை, ஆர்ப்பாட்டம்

பாங்காக்: தாய்லாந்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாங்காக்கில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி இளைஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பிரதமர் பிரயுத் சான் ஓசாவின் உருவப்படங்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாங்காக் குடியரசு நினைவுச் சின்னம் முன்பு 3000க்கும் அதிகமானோர் திரண்டு ஆட்சியை கலைக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டனர்

முன்னாள் ராணுவத் தலைவரான பிரயுத் சான் ஓசா ஆட்சியை கைப்பற்றி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாக சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அகற்றி விட்டு முறையாக தேர்தல் நடத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.


latest tamil news



கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தாய்லாந்தின் புதிதாக கொரோனா தொற்று பரவாத சூழல் உள்ளதால், பல இடங்களிலும் இளைஞர்கள் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X