கொரோனாவை எதிர்த்து போராடும் பாபிஜி அப்பளம்: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Bhabhiji Papad, Fight Coronavirus, BJP Minister, Viral

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 'பாபிஜி' என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி, அது கொரோனாவை எதிர்த்துப் போராடும் எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பார்லி., விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள பா.ஜ., கட்சியை சேர்ந்த அர்ஜூன் ராம் மேக்வால், 'பாபிஜி' என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தினார். ராஜஸ்தான் நிறுவனம் ஒன்று, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அப்பளத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளது.


latest tamil newsஇந்த அப்பளம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வீடியோவில் பேசுகையில், 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ், 'பாபிஜி அப்பளம்' என்ற பெயரில் அப்பள நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். இந்த அப்பளம் கொரோனாவை எதிர்த்து பேராட உதவியாக இருக்கும்' என பேசியுள்ளார். அமைச்சரின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikannan - Nagercoil,இந்தியா
24-ஜூலை-202021:41:53 IST Report Abuse
Manikannan Bjp Ministers don't have brain
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202020:03:03 IST Report Abuse
SAPERE AUDE அரசியல்வாதிகள் எதற்குத்தான் எததிர்து போராடுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது என்று தெரியவில்லை. மத்திய அமைச்சர் ஒரு அப்பளத்தை விளம்பரப்படுதும் விதமாக ஏதோ சொல்லவும் அதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க சில கட்சிகள் ஆயத்தமாகிவிட்டன ! இதற்கு பதிலாக மக்களுக்கு உதவுமாறு ஏதாவது நல்ல காரியங்களில் செய்ய இறங்கலாமே ?
Rate this:
Ray - Chennai,இந்தியா
25-ஜூலை-202005:02:36 IST Report Abuse
Rayஅச்சு பிச்சுல்லாம் அமைச்சரான இப்படித்தான் ஒளறுவாங்க உருப்படியான ஆளுங்களா பாத்து மந்திரியா போடணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X