பொது செய்தி

தமிழ்நாடு

தபால்காரரின் சேவைக்கு கவுரவம்; ரூ. 1 லட்சம் வழங்கிய ராஜ்ய சபா எம்.பி.,

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
postman, appreciate, service, rajya saba mp, rs 1 lac, தபால்காரர், சேவை, பாராட்டு, ஒரு லட்சம், ராஜ்யசபா எம்.பி.,

இந்த செய்தியை கேட்க

குன்னூர்: குன்னூர் வனப்பகுதிகள் வழியாக கிலோ மீட்டர் தூரம் நடந்து, தபால் பட்டுவாடா செய்த தபால்காரருக்கு மத்திய ராஜ்ய சபா எம்.பி., ஒரு லட்சம் நிதி வழங்கி கவுரவித்துள்ளார்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணார பேட்டையை சேர்ந்தவர் சிவன், 65. தபால்துறையில், 30 ஆண்டுகளாக பணியாற்றி இவர் ஹில்குரோவ் தபால் நிலையத்தில், 10 ஆண்டுகள் கிராம தபால்காரராக இருந்தார். சிங்காரா, ஹில்குரோவ் ரயில்பாதை, வடுக தோட்டம், கே.என்.ஆர், பழங்குடியின கிராமங்கள், மரப்பாலம் என 15 கி.மீ. தூரம் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்தே சென்று, தபால்கள், மணியார்டர், பதிவு தபால் பட்டுவாடா செய்ததுடன், சேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட சேவையையும் செய்தார். மார்ச் 7ம் தேதி ஓய்வு பெற்றார். இவரின், சேவை குறித்து 'தினமலர்' நிஜக்கதையில், ஜூலை, 2ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.


latest tamil news
latest tamil newsஇதனை படித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, 'இன்கோ சர்வ்' மேலாண்மை இயக்குநர் சுப்ரியா சாஹூ, சிவனுக்கு பாராட்டு தெரிவித்து, 'டுவிட்டரில் ' பதிவிட்டார். தொடர்ந்து, தேசியளவில் பிரபலமான தபால்காரர் சிவனுக்கு, பாராட்டுகள் குவிந்தன. இதில், கர்நாடகாவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி கவுரவிப்பதாக அறிவித்தார். இவரது இந்தியன் வங்கி கணக்கு எண்ணில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். முதல் முறையாக ஒரு லட்சம் நிதி வழங்கி கவுரவித்த எம்.பி.க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:52:22 IST Report Abuse
Ray இவர்போன்ற மனிதர்களை குறைந்த பட்சம் ஒரு பத்மஸ்ரீ "பட்டம்" கொடுத்து கவரவிக்க இந்திய அரசாங்க சட்டத்தில் இடமில்லை அவருக்கு பிடில் வாசிக்க தெரியாதே என்ன பண்றது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202004:27:14 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டு M.P. க்களுக்கு இவ்வளவு தாராள குணமா என்று பார்த்தால்... அட சே..எப்போதும்போல மற்ற மாநிலத்தவர்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-ஜூலை-202017:37:02 IST Report Abuse
Krishnamurthy Venkatesan பிரதி பலனை எதிர்பாராமல் தன் கடமையை செய்தவறுக்கு கடவுளின் பரிசு. வாழ்க பல்லாண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X