பொது செய்தி

இந்தியா

திரிபுராவில் கொரோனா நோயாளிகளுக்கு விரைவில் பிளாஸ்மா சிகிச்சை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அகர்தலா : திரிபுராவில் கொரோனா பாதித்தவர்களுக்கு விரைவில் பிளாஸ்மா சிகிச்சையை மாநில அரசு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைவாக இருப்பினும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு பல மாநிலங்களிலும் பல்வேறு சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதனால் குணமடைந்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் திரிபுராவிலும் விரைவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை செயல்படுத்த மாநில அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. திரிபுராவில் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு பிளாஸ்மா சிகிச்சையை விரைவில் தொடங்க உள்ளது. மாநிலத்தின் சுகாதாரதுறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட உயர்மட்டகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் பிளாஸ்மா சிகிச்சையை துவங்குவதற்கு முன் சில நடைமுறைகள் உள்ளன. கொரோனா தொற்று பரவுவதை கண்காணிக்க ஜூலை 27 (திங்கள்) முதல் மாநிலம் முழுவதும் வீடு வீடாக கண்காணிப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

தொற்று அறிகுறியுடைய நபர்களை இந்த ஆய்வு பட்டியலிடும். அதன்படி, அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரைவில் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். கொரோனா பாதிப்பு குறித்த செயல்பாட்டிற்கு 3 குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் ஒவ்வொரு 15 நாட்களிலும் நிலைமைகளை கையகப்படுத்தவும், சிகிச்சை முறைகள்,ஆய்வகங்கள் போன்றவற்றில் சுகாதாரத் துறைக்கு மருத்துவ உத்திகளை முன்மொழியவும் திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதுவரை திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 3,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2,072 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 1.24 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சோதனை செய்யப்பட்ட நபர்களில் 2.80 சதவீதம் பேர் தொற்று உறுதியானவர்களாக (நேர்மறையானவர்களாக) உள்ளனர். அதே நேரத்தில் 60.04 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 0.29 சதவீதம் நோயாளிகள் இறந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார் .

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X