லடாக்கில் மத்திய பல்கலைகழகம்: பிரதமர் ஒப்புதல்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் சார்பில் பல்கலைகழகம் அமைப்பதற்கு பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டி உள்ளார்.



latest tamil news



கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களா பிரிக்கப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவு தினம் வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் லடாக் பகுதியில் பல்கலை உருவாக்குவதற்கு பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டினார். இந்த பல்கலைகழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தவிர மற்ற கலை மற்றும் அறிவியல் படிப்புகள் கற்று தரப்படும். இந்த பல்கலைகழகத்தினால் புத்தமத பிரிவினர் பலன் அடைவர் எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக்கில் மத்திய பல்கலை., திறப்பதன் மூலம் இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹால்,ஸ்பிட்டி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பயன் பெறுவர்.மேலும் விரைவில் ரோஹ்தாங் லா சுரங்கப்பாதை திறக்கப்படும் பட்சத்தில் லே பகுதிக்கு ஆண்டு முழுவதும் எளிதாக செல்ல முடியும் பட்சத்தில், புத்த மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பல்கலை அமைப்பதற்கு பச்சை கொடி காட்டியதை அடுத்து கல்வி அமைச்சகம் அதற்கான பணிகளை துவக்கும். பின்னர் சட்டம் இயற்றப்பட்டு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
24-ஜூலை-202022:20:28 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) சீனா இந்தியா எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்துகிறது. பா.ஜ.க. இந்தியாக்கு உள்ளே ஆக்கிரமிப்பு நடத்துகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X