தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.3 சதவீதம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மாநிலத்தின் நோய் தொற்றின் மீட்பு விகிதம் 77.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news


தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,567 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 9 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


கடந்த 24 மணிநேரத்தில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,327 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 77.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, 11,052 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு நாளில் 13,367பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,567 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தின் நேர்மறை விகிதம் 11.7 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதுவரை 3,22,326 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் பாதிப்பு விகிதம் 15.8 சதவீதமாக உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X