பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
online classes, sold cow, buy smartphone, Himachal man

இந்த செய்தியை கேட்க

சிம்லா: கொரோனாவால், பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வரும் நிலையில், தனது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக தந்தை ஒருவர், தனது குடும்பத்துக்கு வருமானம் தரும் பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய நிகழ்வு ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹிமாச்சல் மாநிலம் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள கும்மர் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப் குமார். 4ம் வகுப்பு படிக்கும் மகள் அனு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மகன் வன்ஸ், அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மாநிலத்தில் பரவி வரும் கொரோனா காரணமாக, ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய அவரது குடும்பத்துக்கு, ஸ்மார்ட் போனும், இன்டர்நெட்டும் கனவாக இருந்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், பிள்ளைகளின் படிப்புக்கு உதவ முடியவில்லையே என்ற எண்ணம் அவரை உறுத்த, தனது குடும்பத்துக்கு வருமானம் தரும் பசு ஒன்றை ரூ.6 ஆயிரத்துக்கு விற்று, ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி உள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பிள்ளைகளின் படிப்புக்காக குல்தீப் செய்த செயலுக்கு, பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

குல்தீப்புக்கு உதவும் நோக்கில், அவர் குறித்த விவரங்களை பகிரும் படி, நடிகர் சோனு சூட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குல்தீப்புக்கு அவரது பசு மீண்டும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X