ஸ்வப்னா வங்கி லாக்கரில் ஒரு கிலோ தங்கம், ரூ. 1 கோடி பணம் பறிமுதல்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Kerala, gold smuggling, smuggling case, gold , Swapna Suresh, bank lockers

மூணாறு: கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா வங்கி லாக்கரில் ஒரு கிலோ தங்கம், ரூ. கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


latest tamil newsஷரித் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ஸ்வப்னா கணக்கு வந்திருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரை சோதனை நடத்தினர். அதில் 1 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 1 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை இன்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் ஆக.21ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரின் ஜாமீன் மனுக்கள் ஆக.5ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202005:47:57 IST Report Abuse
Veeramani Shankar Where she kept balance
Rate this:
Cancel
nl ramg -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202022:27:29 IST Report Abuse
nl ramg யார் முன்னிலையில் லாக்கர் திறக்க பட்டது எசமா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஆ...
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202021:56:39 IST Report Abuse
krishna Aaga Indhiavil ore maanilathil mattume aatchi seidha undi kulukki angeyum viraivil sangu.Pesama indha desa virodha Hindhu virodha undis china poi katchi aarambikkalam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X