கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்: உயர்நீதி மன்றம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
madurai highcourt, online gambling, banned, law, மதுரை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டம், தடை, சட்டம், அறிவுறுத்தல்

மதுரை: பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ' தானும் தனது நண்பரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சீட்டு விளையாடிய போது ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது இடங்களில், நடைபாதைளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சீட்டு விளையாடினால் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் தன் மீதான வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.


latest tamil newsமனு விசாரணைக்கு வந்த போது, ' லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ததன் மூலம் தற்கொலைகள் மற்றும் அந்த குடும்பத்தின் வறுமையை தமிழக அரசு போக்கி உள்ளது. தற்போது, ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி போன்ற விளையாட்டுகள் மூலம் இளைஞர்களின் பணம் சூறையாடப்படுகிறது. குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் சிந்திக்கும் திறன், மற்றும் நேரத்தை கெடுக்கிறது.

தெலுங்கானாவில் தற்போது ஆன்லைனில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள் இந்த வகை ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்' என்று நீதிபதிகள் வழக்கினை முடித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
25-ஜூலை-202006:00:14 IST Report Abuse
Indhiyan அரசியலில் சூதாட்டத்தை நிறுத்த ஏதாவது செய்ய உங்களுக்கு சக்தி இருக்குதா எசமான்?
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202005:46:18 IST Report Abuse
Veeramani Shankar Government authorities should make law to abolish/ban online gamblings as lot of youngsters are spoiled due to this. Also lot of nuisances/phonecall/messages for canvassing this nonsense
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூலை-202022:28:59 IST Report Abuse
தல புராணம் டிக் டாக் செயலியாலே தேச பாதுகாப்புக்கு பயங்கர குந்தகம் ஏற்படும்.. ஆன்லைன் சூதாட்டத்தால் பொருளாதாரம் 6 டிரில்லியனுக்கு பிச்சிக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X