பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவு ; மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி : உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கொரோனா பாதிப்பு மற்றும் குறைவான உயிர்பலி நேரிடுவதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த கொரோனா பாதிப்பு மற்றும் குறைந்த அளவிலான உயிரிழப்பு ஏற்படுவதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது : இந்தியாவில் 1 மில்லியன் மக்கள் தொகைக்கு 864 பேர் பாதிக்கப்படுகின்றனர். 11 பேர் பலியாகின்றனர். உலக கொரோனா பாதிப்புகளில் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது.


latest tamil news



இதுவரை கொரோனா தொற்றுக்கு 1 கோடியே 5 லட்சம் வரை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. நாடு முழுவதும் நாளொன்றுக்கு 3.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் தொற்றுக்கான பரிசோதனையை அதிகரித்து , அதனால் நாட்டில் 10 லட்சம் பரிசோதனைகளை (நாளொன்றிற்கு) நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தையும், பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் எட்டியது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.45 சதவீதமாகவும், இறப்பு எண்ணிக்கை 2.3 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202006:59:25 IST Report Abuse
Muguntharajan நீ இப்படியே புள்ளிக் கணக்கு சொல்லிக்கிட்டு இரு. இப்ப உலகத்தில நம்ம நாட்டோட பாதிப்ப மூன்றாவது இடத்துக்கு வந்தாச்சி. சீக்கிரமே முதல் இடத்துக்கு வந்திடும். அப்பவும் நீ இப்படித்தான் பேசுவுயா?
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
25-ஜூலை-202006:49:46 IST Report Abuse
Elango சரியான testing மற்றும் accountability வேண்டும்.. பாதி மறைத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறோம், அதில் ஒன்றும் பெருமை இல்லை.... உண்மை நிலை சொன்னால் மக்கள் இன்று சற்று பாதுகாப்பு/சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியும்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202006:17:32 IST Report Abuse
Mani . V அப்புடியா? நெஜமாலுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X