89% ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள்; 24% பேர் மீது கிரிமினல் வழக்கு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Rajya Sabha, MP, criminal cases, Rajya Sabha members, criminal cases

புதுடில்லி: ராஜ்யசபாவில் தற்போது இருக்கும் 229 எம்.பி.,க்களில், 89% ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்; 24% பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது, ஐனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.,) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஏ.டி.ஆர்., ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டள்ள, 229 எம்.பி.,க்களில் 54 எம்.பி.க்கள் (24 சதவீதம்) மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பது பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ., முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 77 பா.ஜ., எம்.பி.,க்களில் 14 எம்.பி.,க்கள் (18%) மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது. மொத்தமுள்ள 40 காங்., எம்.பி.,க்களில் 8 பேர் (20%) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளது. 3வது இடத்தில் உள்ள திரிணாமுல் கட்சியில், 13 எம்.பி.,க்களில் 2 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.

4 எம்.பி.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் காங்., எம்.பி. கே.சி.வேணுகோபால் மீது பாலியல் பலாத்கார வழக்கும், 4 எம்.பி.க்கள் மீது கொலைமுயற்சி வழக்குகளும் உள்ளன. மாநில வாரியாக கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,க்களில் உ.பி.,யில் 30 எம்.பி.,க்களில் 6 பேர், மஹா.,வில் 19 எம்.பி.,க்களில் 9 பேர், தமிழகத்தில், 18 எம்.பி.,க்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.


latest tamil news





கோடீஸ்வர எம்.பி.,க்கள்:



229 ராஜ்யசபா எம்.பி.க்களில் 203 பேர் (89 சதவீதம்) கோடீஸ்வரர்கள். பா.ஜ.,வில் 90% (69 எம்.பி.,க்கள்) எம்.பி.,க்கள், காங்., கட்சியில் 93% (37 பேர்) எம்.பிக்கள், அதிமுக., எம்.பி.,க்கள் 9 பேரும் கோடீஸ்வரர்கள். அதிகபட்சமாக பா.ஜ., எம்.பி.,க்கள் 77 பேரின் சராசரி சொத்து மதிப்பு, ரூ.27 கோடி. அடுத்த இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38 கோடி. அதிமுக எம்.பி.,க்கள் 9 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6 கோடி. திமுக எம்.பி.,க்கள் 7 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக பீஹாரின் ஜே.டி.யு., கட்சி எம்.பி.,யான மகேந்திர பிரசாத்தின் சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரத்து 78 கோடி. குறைவான சொத்து உள்ள எம்.பி.,யாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி. மகாராஜா சனஜோபா லீஸ்ஹெம்பா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.5 லட்சம்.


பெண்கள் 10%



229 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் வெறும் 22 பெண் எம்.பி.,க்கள் (10%) மட்டுமே உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
25-ஜூலை-202006:18:39 IST Report Abuse
Raj கருப்பு பணம் நீக்கபட்டது. ப. சி குற்றம் அற்றவர். சசிகலா 4 வருட சொகுசு சிறை கருப்பு சொத்தை சலவை செய்துவிட்டார்
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
25-ஜூலை-202002:39:36 IST Report Abuse
தமிழ் வேந்தன் பிஜேபி ன்னாலே கிரிமினல் thaanaa ?
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
24-ஜூலை-202022:43:42 IST Report Abuse
Charles இது வெட்கப்படவேண்டிய நிலை. மோடியும், அமித் ஷாவும் என்ன சொல்கிறார்கள்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X