பொது செய்தி

இந்தியா

லாக்டவுன் தளர்வுக்கு பின் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: லாக்டவுன் தளர்விற்கு பின்னர் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் , முதற்கட்ட ஊரடங்கை அறிவித்து. தொடர்ந்து 4 கட்டங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலகட்டங்களில் எந்த ஒரு நிறுவனங்களும் இயங்க வில்லை. இதன்காரணமாக பலர் வேலை இழந்தனர். வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே பல்வேறு மாநிலங்கள்ஒருசில நிபந்தனை மற்றும் தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து ஜூன் 24 ம் தேதி முதல் ஜூலை 22 ம் தேதி வரையில் லாக்டவுனுக்கு பின்னரான வேலைவாய்ப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வை நடத்தியது.


latest tamil news



இதில் ஐந்து பேரில் ஒருவர் வேலை இல்லாமல் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,21.57 சதவீத மக்கள் முற்றிலும் வேலை இழந்து விட்டதாகவும்,25.92 சதவீத மக்கள் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் பணிபுரிவதாகவும், 8.33 சதவீத மக்கள் தங்களின் வருமானம் குறைந்து விட்டதாகவும், 7.09 சதவீதத்தினர் சம்பள குறைப்பு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள் .1.20 சதவீத மக்கள் வேலை செய்து கொண்டு இருப்பதாகவும்,ஆனால் சம்பளம் கிடைக்கவில்லை எனவும் கூறியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25-ஜூலை-202007:42:33 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இதுக்கெல்லாம் காரணம் தெய்வ குத்தம்..முருகனை கேலி செய்வீங்க.. ராமனுக்கு கோவில் கட்ட விடமாடீங்க..அப்புறம் எப்புடி நாடு நல்ல இருக்கும்? ராமனுக்கு கோவில் எழுப்பி கும்பாவிஷேகம் பண்ணுதுகபுரம் பாருங்க...5 இல் ஒருவனுக்கு வேலையில்லைங்கிற நிலை மாறி..5 வேலையில் ஓன்று காலியாகவே உள்ளது ஆட்கள் இல்லாததால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதின்னு மாறும்...அதனால் வேலை போனவங்க அதை பத்து கவலைப்படாம அமைதியாய் ராமஜெயம், கந்தசஷ்டிகவசம் சொல்லிட்டு ஹாபியா இருங்க ..ராமர் கோவில் கட்டும் வரை.. அப்புறம் உங்க வாழ்க்கையே மாறிடும்.. அரசுக்கு ஒரு வேண்டுகோள் வேலை இழந்தவர்களுக்கு ராமனை அர்ச்சித்த கோவில் பிரசாதம் வீடு தேடி சென்று கொடுக்க உத்தரவிடவேண்டும்...இதற்க்கு ஆகும் செலவை அரசு ஏற்று இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்... அதுமட்டுமல்ல அரசு சம்ஸ்கிருதத்தில் ஒரு டிவி சேனல் ஆரம்பித்து வேத இதிகாசங்கள் என்று பக்திமார்க்கத்தை பரப்பவேண்டும்...இதை கேட்பதன் மூலமே வேலையில்லா திண்டாட்டம் நிரந்தரமாக ஒழியும்....ஜெய் ஸ்ரீராம்..
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202006:34:36 IST Report Abuse
Nathan ஆல் ஒதுக்கீட்ஸ் 100% சேப் .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202006:04:59 IST Report Abuse
Mani . V கொஞ்சம் பொறுங்கள், வெகு விரைவில் ஐவரில் ஒருவருக்குத்தான் வேலை இருக்கப் போகிறது. (ஆமா இப்பொழுது கொரோனா சனி, ஞாயிறு மட்டும்தான் டூட்டி பார்க்குதா கௌரவ டாக்டர் ஐயா?)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X