எனது எச்சரிக்கையை மத்திய அரசு கேட்பதில்லை: ராகுல்| Dinamalar

எனது எச்சரிக்கையை மத்திய அரசு கேட்பதில்லை: ராகுல்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (47)
Share
புதுடில்லி: 'கொரோனா பரவல், இந்திய பொருளாதாரம் குறித்து நான் விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.காங்., எம்.பி., ராகுல், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கொரோனா பரவல், சீன விவகாரம், இந்திய பொருளாதாரம் என தொடர்ந்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில் மத்திய அரசு தனது கருத்துகளுக்கு செவி
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: 'கொரோனா பரவல், இந்திய பொருளாதாரம் குறித்து நான் விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்., எம்.பி., ராகுல், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கொரோனா பரவல், சீன விவகாரம், இந்திய பொருளாதாரம் என தொடர்ந்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில் மத்திய அரசு தனது கருத்துகளுக்கு செவி சாய்க்கவில்லை என ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா பரவல் குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டது. தற்போது சீன எல்லை பிரச்னை குறித்தும் எச்சரித்து வருகிறேன். ஆனால் அதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X