பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து 80 வயதில் மீண்ட முன்னாள் குஜராத் முதல்வர்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
corona in gujarat, recovery, gujarat former cm, recovered, Coronavirus, Corona, Covid-19, கொரோனா, முன்னாள், முதல்வர், குஜராத், குணமடைந்தார், உடற்பயிற்சி

காந்திநகர்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து 80 வயது முன்னாள் குஜராத் முதல்வர் மீண்டுள்ளார்.

கடந்த 1997 ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. காங்., கட்சியில் இருந்த போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். 2017 ம் ஆண்டு காங்., கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி துவங்கினார். கடந்த மாதத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வகேலா பிறகு காந்திநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 16ம் தேதி கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய முன்னாள் முதல்வர் வகேலா முடங்கி விடவில்லை. தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் வாக்கிங் செல்வது மட்டுமில்லாமல் பளு தூக்கும் பயிற்சியிலும் ஈடுபட்டார். பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டார். 'Body fit+Mind fit= Life hit' என்ற தலைப்பில் சங்கர்சிங் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்ளில் வைரலாகின.


latest tamil newsமுன்னதாக கொரோனாவிலிருந்து குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அரசியல்வாதியாக இருந்தாலும் சங்கர்சிங் வகேலா உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர். சிறுவயது முதலாகவே உடற்பயிற்சியில் ஈடுபடும் அவர் பிடித்த உணவை நன்றாக சாப்பிடுவதும் அதிக அளவில் பால் குடிப்பதும் தன் ஆரோக்கியத்தின் ரகசியம் என குறிப்பிட்டுள்ளார். சங்கர்சிங் வகேலாவுக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு என்று எந்த நோயும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202006:31:07 IST Report Abuse
Nathan சங்கர் சிங் வாகெலா ஷோ கேல்தா ஹை. மரக்கட்டை வலயங்களை கம்பீரமாக தூக்கி படு தமாஷ் பாஸ்.
Rate this:
Cancel
24-ஜூலை-202021:54:11 IST Report Abuse
rasheed வாழ்த்துக்கள் உங்களை போல எல்லோரும் தைரியம்தான் வரணும் இன்றும் என்றும் நன்றாக இருக்க வாழ்துக்கள்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-ஜூலை-202021:46:45 IST Report Abuse
வெகுளி இதை விட தீவிரமான உடற்பயிற்சியில் ஓணான் ஒடம்பழகர் ஈடுபட்டதாக போட்டோவெல்லாம் தமிழகம் பார்த்திருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X