சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'சமூக வலைதளமே

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'சமூக வலைதளமே

'ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கூடாரம் காலியாவதை, அமைதியாக வேடிக்கை பார்க்கிறது கட்சி மேலிடம். இப்படி இருந்தால், தொண்டர்களிடையே சோர்வு ஏற்படாதா...' என, கவலைப்படுகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை அதிரடியாக கவிழ்த்த, பா.ஜ., அங்கு, தங்கள் ஆட்சியை அமைத்தது. தற்போது, ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கூடாரம் கலகலத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் அங்கு, காங்கிரஸ் அரசு கவிழலாம் என்ற சூழல் உள்ளது. அதற்கு பின், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசை கதற வைப்பதற்கான அதிரடிகள் ஆரம்பமாகும் என்ற பீதி, கட்சியினரிடையே நிலவுகிறது.

'நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. கட்சியை தக்க வைக்க வேண்டுமானால், மேலிட தலைவர்கள் களத்தில் இறங்க வேண்டும். அதிரடியாக செயல்பட வேண்டும்' என, ஆலோசனை கூறினர், மூத்த தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் எம்.பி., ராகுலோ, இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் தினமும் அறிக்கை பதிவிடுவதுடன், தன் அரசியல் ஆட்டத்தை முடித்து விடுகிறார்.

'மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்க முடியாவிட்டாலும், கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஓட்டம் பிடிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையாவது மேற்கொள்ளலாமே... சமூக வலைதளமே கதி என கிடக்கிறாரே' என்கின்றனர், கட்சியின் உண்மை விசுவாசிகள்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஜூலை-202017:02:49 IST Report Abuse
r.sundaram எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது. நாட்டில் பிஜேபியை குறை சொல்ல வேறு விஷயங்களே இல்லை அதனால் சீனாவை தூண்டிவிட்டு போர் ஏற்பட்டால் அதைவைத்து பி ஜெ பையை குறை சொல்லலாம் என்று இவர் அண்டைநாட்டை தூண்டி விட்டிருப்பாரோ என்று சந்தேகம். ஒப்பந்தமும் அதற்காகத்தானோ?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
25-ஜூலை-202016:02:20 IST Report Abuse
mathimandhiri என்ன செய்வது? இந்த நாட்டின் தலையெழுத்து. இந்த ஆளையெல்லாம் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு பரம்பரை அடிமைக்கு கூட்டம்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
25-ஜூலை-202009:08:40 IST Report Abuse
mathimandhiri அட அடிமைக்கூட்டமே, இந்த .....ஐ விட்டால் உங்களுக்கு நாட்டில் வேறு நல்ல ஆளே கிடைக்க மாட்டாங்களா? அப்படி எத்தனை தலை முறைக்குத் தான் இத்தாலியிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X