சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மருந்து இல்லை; சிகிச்சை எப்படி?

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
முனைவர் சு.பால்ராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் பரவி வரும், 'கொரோனா' வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, ஆறு மாதங்களாக, மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் சேவையை போற்றுவோம்; அதேநேரம், அவர்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.தமிழகத்தில், நம் பாரம்பரிய சித்த மருத்துவம்,
 மருந்து இல்லை; சிகிச்சை எப்படி?

முனைவர் சு.பால்ராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் பரவி வரும், 'கொரோனா' வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, ஆறு மாதங்களாக, மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் சேவையை போற்றுவோம்; அதேநேரம், அவர்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

தமிழகத்தில், நம் பாரம்பரிய சித்த மருத்துவம், கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளித்துள்ளது. இது, நிரூபிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு, தமிழக அரசு அங்கீகாரம் அளித்தது.சென்னையில், இரண்டு மையங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில், ரசாயன கலவை கிடையாது. நோயாளியின் உயிருக்கு, வேறு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

எளிமையான இந்த சிகிச்சையில், மிகக் குறைந்த செலவில், எந்தவித பக்க விளைவும் இல்லாமல், நோயால் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் தேறி வருகின்றனர்.நம் மக்களுக்கு, ஆங்கில மருத்துவத்தின் மீதிருக்கும் மோகம் தீரவில்லை. சாதாரண இருமலுக்கு கூட, ரசாயன மருந்து உட்கொள்ளும் அளவிற்கு, நம் மக்கள் மாறி விட்டனர்.

ஆங்கில மருத்துவத்தில், கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனியார் மருத்துவமனையில், நோயாளிகளிடம், லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து, என்ன சிகிச்சை அளிக்கின்றனர்?கொரோனாவை ஒழிக்கும் மருந்து இல்லை; ஆனால், சிகிச்சை உண்டு எனும் கொடுமை அல்லவா, அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் காரணம், நம் பாரம்பரிய மருத்துவமான, சித்தா மீது, நமக்கு நம்பிக்கையோ, விழிப்புணர்வோ இல்லாமல் இருப்பது தான்.ஆங்கில மருத்துவம், பல நோய்களுக்கு புரட்சிகரமான தீர்வுகளைக் கண்டுள்ளதை, யாரும் மறுக்கவில்லை.

அதே நேரத்தில், சித்த மருத்துவம், பல நோய்களுக்கு, எளிய தீர்வை கொடுத்துள்ளது என்பதையும், நினைவில் கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில், கொரோனா நோய்க்கு, சித்த மருத்துவம் நல்ல பயனளித்து வருவது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை, உலக அளவில் எடுத்துச் செல்ல, இது ஒரு நல்ல சந்தர்ப்பம் கூட!

***


போலீசாரையும் புரிந்து கொள்வோம்!


லா.போஸ்கோ பெர்னாண் டோ, மதுரையிலிருந்து எழுதுகிறார்: குற்றம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபரை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும்போது, அவரை அடித்து துன்புறுத்துவது, மனித உரிமை மீறல் மட்டுமல்ல; மிருகத்தனமான செயலாகும்.

அவர், விசாரிக்கப்படும் நபர் தானே தவிர, குற்றவாளி அல்ல. அவரை துன்புறுத்துவது என்பது, செய்யாத குற்றத்தை, 'செய்தேன்' என, ஒப்புக்கொள்ள செய்யும், அடாவடித்தனம்.ஓரிரு இடங்களில் நடக்கும் தவறான சம்பவத்தால், ஒட்டுமொத்த போலீசாரையும் விமர்சிப்பது, ஏற்கத்தக்கதல்ல.

காவல் துறையினர் அனைவரும், அரசுப் பணியாளர்களே. ஆனால், அவர்களுக்கான அலுவல் நேரம், இதுநாள் வரை வரையறுக்கப்படவில்லை. எப்போதும், எந்நேரமும் பணியாற்ற அழைத்தால், உடனே செல்ல வேண்டும். இந்த நிலைமை, மற்ற அரசு ஊழியர்களுக்கு இல்லை.பண்டிகை, விடுமுறை ஏதும் கிடையாது. கலவரம் ஏற்பட்டால், உயிரை பொருட்படுத்தாது, முன்னின்று, அதை தடுக்க வேண்டும்.

போலீசாரின் அவல நிலையை, நாம் புரிந்துக் கொள்ளாமல், தவறாக விமர்சிக்கக் கூடாது.குடும்ப பிரச்னை, ஓய்வு இல்லாமை, பணியில் மன உளைச்சல் உள்ளிட்டவை, அவர்களுக்கும் உண்டு. பிறரை விட, அவர்களுக்கு தான், பணியிட சூழலில் நிம்மதியின்மை அதிகம்.கடும் வெயில், மழை பொருட்படுத்தாது, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும், 'டிராபிக்' போலீசார் சந்திக்கும் துயரங்கள், இன்னும் அதிகம்.எனவே, போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மேலும், தீயணைப்பு வீரர்கள் உட்பட, அனைத்து நிலையில் உள்ள சீருடைப்பணியாளர்கள் அனைவரையும், 'போலீசார்' என்ற பெயரில், பணியில் நியமனம் செய்ய வேண்டும்.சுழற்சி முறையில், அவர்களுக்கு பணி வாய்ப்பு அளித்தால், போலீசாருக்கு நல்ல ஓய்வு, பணியில் மனநிறைவு, உடல் நலம், குடும்பத்தில் அமைதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.அரசு நடவடிக்கை எடுத்தால், உண்மையாகவே, போலீசார், மக்களுக்கு நண்பராக இருப்பர்!

***


பயப்படாதீங்க; கவனமாக இருங்கள்!


என்.கிருஷ்ணவேணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்நேரத்தில், எல்லாருடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி, 'கொரோனா தொற்றிடுமோ' என்பது தான். இதுவும், மற்ற வைரஸ்களை போலத் தான்; எனவே, வதந்திகளை நம்பாதீங்க; பயப்படாதீங்க.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள, குழந்தை, முதியோர், நோயாளிகளைத் தான், கொரோனா அதிகம் பாதிக்கிறது. எனவே, கூட்டம் சேரும் இடத்திற்கு, குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர். சோப்பு பயன்படுத்தி நன்கு கைகளை கழுவிய பின், பிள்ளைகளை தெருவில் விளையாட அனுமதியுங்கள்.வெளியே சென்று வந்தால், கைகளை கழுவிய பின், குழந்தைகளை தொடுங்கள்.

தேவையின்றி வெளியே செல்வதை, முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.வீட்டிலேயே இருக்க கஷ்டமாக இருந்தால், குடும்பத்தினருடன் அமர்ந்து விளையாடுங்கள்; மனம் விட்டு பேசுங்கள்.'வேலை... வேலை' என, காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போல் ஓடிக்கொண்டிருந்தோருக்கு, இந்த ஊரடங்கு அருமையான வாய்ப்பு.

உங்கள் குழந்தைகளுடனும், உறவினர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுங்கள். வாய்ப்பு இருந்தால், தோட்டம் போடுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்; உடற்பயிற்சி செய்யுங்கள்.உணவில் இஞ்சி, மிளகு, மஞ்சள் துாள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

திணை, கம்பு, சோளம், கேழ்வரகு, நெல்லிக்காய், கொய்யா, குடமிளகாய், கீரை, கருப்பு திராட்சை, மீன், பப்பாளி இவற்றை சாப்பிடுங்கள்; தயிர் சாப்பிடுவதை தவிருங்கள்.கொரோனாவை கண்டு பயப்படாதீங்க; ஆனால், கவனமாகஇருங்கள்!lll

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜூலை-202006:10:58 IST Report Abuse
D.Ambujavalli உலகளவில் கொரானா தொற்று, மரண எண்ணிக்கையை ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்பி மக்களின் பீதியை அதிகரிக்கின்றன. மேலும், ஒரு தெரு, வீடு சீல் வைக்கப்பட்டால் எல்லோருமே கும்பலாகத் தொற்றுக்கு ஆளாகி கொத்தாக மடிவதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள். சீல் வைப்பது வெளி யார் புழக்கம், பரவ லைக் கட்டுப்படுத்த தானே என்று உணர்ந்தால் போதும். எங்கள் உறவினர் தொற்றுக்கு உட்பட்டு, வீட்டிலேயே தனித்திருத்தல், மருத்துவம் என மிக எளிதில் குணமடைந்துள்ளனர் நேர்மறை எண்ணங்களை வளர்ப்போம் பாதுகாப்பிலும் கவனமாக இருப்போம் .\
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X