பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,007 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மாநிலம் முழுவதும் 110 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்தது.



latest tamil news



மாநில அளவில் மொத்தம் 52,791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பெங்களூருவில் மட்டும் 30,561 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,267 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு 41ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நகரில் இதுவரை 833 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


latest tamil news



மாநிலம் முழுவதும் 611 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 11லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
25-ஜூலை-202014:45:36 IST Report Abuse
Raj பின் ஏன் கர்நாடக அரசு ஊரடங்கை தளர்ந்துகிறது? புரியவில்லை
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202006:19:44 IST Report Abuse
Nathan தென் கர்நாடகாவா? திப்பு மாற்றிய வட கன்னடாவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X