சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: இட ஒதுக்கீட்டிற்கு முதலில் குரல் கொடுப்பது, அ.தி.மு.க.,வாக தான் இருக்கும். தி.மு.க., கூட்டணியில் உள்ள, தி.க., தலைவர் வீரமணி, ஜெயலலிதாவிற்கு, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார். எனவே, ஒரு போதும், தமிழகத்தில், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, அ.தி.மு.க., செயல்படாது.

'டவுட்' தனபாலு: பட்டம் வழங்கினார் என, நீங்கள் சொல்லும் நபர், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியின் போது, அடக்கி வாசித்தார். அதன் பின், இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க.,வின் ஊதுகுழலாக செயல்படுகிறார். அவரை எல்லாம் உதாரணமாக தெரிவிக்கிறீர்களே... எனினும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, உங்கள் கட்சி செயல்படாது என்பதில், யாருக்கும், 'டவுட்' வராது!

***

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்: கந்த சஷ்டி கவசத்தை, அருவருக்க தக்க பாடல் என, கறுப்பர் கூட்டம் என்ற கும்பலை சேர்ந்தவர் சொல்வது அநியாயமானது. இதை தட்டி கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில், காவி கொடியுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடுகின்றன. ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் பயப்பட தேவையில்லை.

'டவுட்' தனபாலு: இப்போது, கந்த சஷ்டி கவசத்திற்கு அவதுாறு என்றதும், தி.மு.க., - கம்யூ., தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஹிந்துக்களும் கண்டிக்கின்றனர்; அந்த குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்கின்றனர். இப்படியே பேசி, ஹிந்து மதத்தை, ஆண்டாண்டு காலமாக நிந்தித்து வந்தவர்களை அப்போதே ஏன் கண்டிக்காமல் விட்டனர் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

பத்திரிகை செய்தி: புதுச்சேரியில் கொரோனா தொற்றால், 34 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா, 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள், தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'டவுட்' தனபாலு: யூனியன் பிரதேசமாக கருதப்படும் புதுச்சேரி, சின்ன மாநிலம்; கொரோனா பாதிப்பும் குறைவு. எனினும், இதை விட சிறிய மாநிலங்களில் கொரோனா பாதித்து, பலர் இறந்துள்ளனர். அந்த மாநிலங்களின் ஆளும் அரசுகளுக்கு இல்லாத, நல்ல எண்ணம், உங்களுக்கு வந்துள்ளது என்பதில், 'டவுட்'டே யாருக்கும் வராது. இதுபோலத் தான், அரசுகளின் செயல்பாடு இருக்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
25-ஜூலை-202007:08:25 IST Report Abuse
Aaaaa நாக்கை துண்டிக்க சொல்லி வன்முறையை தூண்டும்விதமாக பேசுபவன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜூலை-202005:52:12 IST Report Abuse
D.Ambujavalli அன்று இந்துக்களின் சடங்குகளை ஏளனம் செய்தவர்கள் பிறகு புழக்கடை வழியாக வைதீகர்களை வரவழைத்து பரிகாரங்கள் செய்ததும், இன்றும் கோயில்கள் ஏறி இறங்குவதும் உலகறிந்த ரகசியம். இவர்கள் எதற்காக கந்தன் விஷயத்தில் தலையிடுவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X