சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கள்ளச்சாவி போட்டு திறக்கப்படும், 'டாஸ்மாக்' கடைகள்!

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கள்ளச்சாவி போட்டு திறக்கப்படும், 'டாஸ்மாக்' கடைகள்!

''முன்ஜாமின் போலீஸ் ஸ்டேஷன்னே பேர் வந்துடுச்சு பா...'' என்றபடியே, நாயர் கடை நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சி, மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்ல, அஞ்சு வருஷங்களுக்கும் மேலா, சில ஏட்டுகள் வேலை பார்க்கிறாங்க... இவங்க, தங்களது சீனியாரிட்டியை பயன்படுத்தி, ஸ்டேஷனுக்கு வர்ற புகார்கள் மீது, உடனுக்குடன் வழக்கு பதிவு பண்ண வச்சிடுறாங்க பா...

''ஆனா, வழக்குல சிக்குனவங்களை கைது செய்ய மாட்டாங்க... அதுக்கு மாறா, அவங்களை, தங்களுக்கு தெரிஞ்ச வக்கீல்களிடம் அனுப்பி, முன்ஜாமின் வாங்க சொல்லிடுறாங்க பா...

''இதுக்காக, வழக்குல சிக்குனவங்களிடம் ஒரு தொகையும், வக்கீல்களிடம் கமிஷனும் கறந்துடுறாங்க... இதனால, இந்த ஸ்டேஷனையே, முன்ஜாமின் ஸ்டேஷன்னு தான் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஒருத்தருக்கே பதவி நீட்டிப்பு குடுக்கிறது நல்லாயிருக்காங்க...'' எனக் கேட்டு நிறுத்தினார், அந்தோணிசாமி.''இல்லை தான்... எந்தத் துறையில இந்த சர்ச்சை...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சி.எம்.டி.ஏ.,வுக்கு எதிரா, உயர் நீதிமன்றத்துல தொடரப்படும் வழக்குகள்ல, சி.எம்.டி.ஏ., தரப்புல ஆஜராக, தனியா வக்கீல்கள் குழுவே இருக்குங்க... இந்தக் குழுவுக்கும், சி.எம்.டி.ஏ., நிர்வாகத்துக்கும் தொடர்பு அதிகாரியா, மூத்த சட்ட அலுவலர் பதவி இருக்குங்க...

''இதுக்கு, மூத்த வக்கீல் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை, ஒப்பந்த முறையில நியமிக்க, சி.எம்.டி.ஏ., தரப்புல முடிவு செஞ்சாங்க... ஆனா, அதுக்கு மாறா, 2018ல, சீனிவாசன் என்பவரை, மாசம், 91 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல, ஒரு வருஷத்துக்கு நியமிச்சாங்க...

''இவர், மத்திய அரசின் கணக்கு தணிக்கை பிரிவுல, சட்ட ஆலோசகராக இருந்து, ஓய்வு பெற்றவர்... ஒரு வருஷம் முடிஞ்சு, 2019ல, ஒரு வருஷம் நீட்டிப்பு குடுத்தாங்க... இதுவும், இப்ப முடியப் போகுது...

''மறுபடியும் அவருக்கே நீட்டிப்பு வழங்க, முடிவு பண்ணியிருக்காங்க... இதுக்கு, சி.எம்.டி.ஏ., தரப்புலயே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கு... 'சட்ட அலுவலர் நியமனத்துல, அரசு தலையிட்டு, உரிய வழிகாட்டுதலை வழங்கணும்'னு ஊழியர்கள் எதிர்பார்க்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கடைகளை பேருக்கு தான் மூடி வச்சிருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, புறநகர் பகுதிகள்ல, நாலு மாசமா, 'டாஸ்மாக்' கடைகள் பூட்டி கிடக்குல்லா... ஆனா, சென்னை, 'குடி'மகன்களுக்கு சரக்கு தட்டுப்பாடு இல்லாம கிடைக்கு வே...''உள்ளூர் அரசியல் புள்ளி, போலீசார், டாஸ்மாக் ஊழியர்கள்னு முத்தரப்பு கூட்டணி போட்டு, 'சரக்கு' வியாபாரத்துல இறங்கிட்டாவ... குறிப்பா, தென் சென்னையில பல கடைகளை கள்ளச்சாவி போட்டு திறந்து, பாட்டில்களை பெட்டி, பெட்டியா எடுத்துட்டாவ வே...

''குவார்ட்டர், 500 ரூபாய், ஆப், 1,000 ரூபாய்ன்னு போவுது... இதுக்கு, ஏஜன்ட், சேல்ஸ்மேன்னு பக்காவா, 'நெட்வொர்க்' வச்சிருக்காவ வே... 'இப்படி அப்பாவி ஏழைகளிடம், அநியாயமா பணத்தை பிடுங்குற கும்பலை கட்டுப்படுத்த, பேசாம கடைகளை திறந்து விட்டுரலாம்'னு நேர்மையான ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அதை ஆமோதித்தபடியே, நண்பர்கள் நகர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜூலை-202006:00:21 IST Report Abuse
D.Ambujavalli ஊரடங்கால் டாஸ்மாக் புறநகர் பகுதியில் மூடி கொரானாவைக் கட்டுப்படுத்தி, கமிஷனுக்கும் வழி செய்து கொடுத்த அரசுக்கு நன்றி சொல்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X