பொது செய்தி

தமிழ்நாடு

சேத்தியாத்தோப்பு கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு மார்க்கெட் கமிட்டியில் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் துவங்கியது.சேத்தியாத்தோப்பு மார்க்கெட் கமிட்டியில் குறுவை நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடந்தது. கமிட்டி கண்காணிப்பாளர் பாரதிராஜா முன்னிலையில், மறைமுக ஏலத்தில் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்தனர்.குறுவை நெல் ரகங்களில் மோட்டா ரகமான அம்பாசமுத்திரம் 16 வகை, 75 கிலோ எடையுள்ள மூட்டை விலை ரூபாய் 950 முதல் 1100 வரையும் தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்தனர். குறுவை சன்ன ரகங்களான ஏடிடி 43 ரக நெல்லினை தரத்தின் அடிப்படையில் 75 கிலோ எடையுள்ள மூட்டை நெல் ரூபாய் 1000 முதல் 1200 வரை நிர்ணயம் செய்தனர்.மோட்டா ரகமான அம்பாசமுத்திரம் 16 ரகம் 435 மூட்டைகளும், சன்னரகமான ஏடிடி 43 250 மூட்டைகளும், சம்பா பருவத்தின் போது விவசாயிகள் இருப்பு வைத்திருந்த பிபிடி நெல் 800 மூட்டைகள் உட்பட 1485 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது.வேளாண் அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண் அலுவலர் லோகநாதன், விவசாய சங்க தலைவர் வேல்முருகன், வீரநாராயணன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X