சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

நகராட்சியிலேயே ரூ.2 கோடியா?

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நகராட்சியிலேயே ரூ.2 கோடியா?

நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஏ.கே.பி.சின்ராஜ்.அவர், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளரை சமீபத்தில் சந்தித்தார்.

பின், நிருபர்களிடம் கூறுகையில், 'இந்நகராட்சியில், ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், 48 பேர் மட்டுமே பணிக்கு வந்த நிலையில், 205 பேர் வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டி, மாதம், 18 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, ௨ கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது' என்றார்.

நிருபர் ஒருவர், 'ஆளுங்கட்சி அரசியல்வாதியும், அதிகாரியும் ஊழல் பண்ணுறதுல கூட்டணி வச்சா, இந்த நாட்டை, அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது...' என்றார். அருகிலிருந்தவர், 'நகராட்சிக்கே இந்த அளவுன்னா, மாநில அளவுல எவ்வளவு அடிப்பாங்க...' எனக் கேட்டதும், சுற்றியிருந்தோர் மலைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜூலை-202005:56:56 IST Report Abuse
D.Ambujavalli ஒப்பந்தப் பணியாளர் , தினக்கூலிகள் என்பவர்கள் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங் களின் காமதேனு மஸ்டர் ரோல் புகழ் என்று அக்காலத்திலேயே பிரபலமான வழிமுறை ஆயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X