வளர்ச்சி திட்டப்பணிகள்கூடுதல் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி திட்டப்பணிகள்கூடுதல் கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share

சிறுபாக்கம்; சிறுபாக்கம் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்ரா ஆய்வு மேற்கொண்டார்.மங்களூர் ஒன்றியம், அ.களத்துார், பெரியநெசலுார், ரொட்டாக்குறிச்சி, அடரி, மாங்குளம், மங்களூர், பட்டாக்குறிச்சி, கழுதுார், அரியநாச்சி, தொண்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் தார் சாலை, சமுதாய கிணறு அமைத்தல், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம், சத்துணவு மைய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்ரா ஆய்வு செய்தார். பணிகளின் தரத்தை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க ஒன்றிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். செயற்பொறியாளர்கள் செல்வக்குமரன், பிரபாகரன், பி.டி.ஓ.,க்கள் சங்கர், தண்டபாணி, பொறியாளர்கள் மணிவேல், சண்முகம் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X