சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'இதெல்லாம், கட்சி இருக்கிறது என்ற விளம்பரத்திற்காகத் தானே தவிர, மின் கட்டண குறைப்புக்கான போராட்டம் அல்ல...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: தி.மு.க.,வில், ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்கின்றனர்; மின் கட்டணம் குறித்து, 1,000 பேர் கூட போராடவில்லை. மீதமுள்ளவர்கள், அவர் கருத்தை ஏற்கவில்லை. 'அ.தி.மு.க., ஆட்சி தொடரும்; அன்னியப்பட்டு விடுவோம்' என்ற பயத்தில், தி.மு.க., போராடுகிறது.

***

'ஜாதி, மத வேறுபாடுகள், பிற மத துவேஷங்கள் இருக்கக் கூடாது; சலுகைகள், அனைத்து மதங்களுக்கும் வேண்டும் என்கிறீர்களா...' என, கேட்கத் துாண்டும் வகையில், ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தமிழகத்தில், சட்ட விரோதமாக பல இடங்களில், கோவிலுக்கு அருகாமையில், நாத்திக கல்வெட்டுகள் வைத்துள்ளனர். இவற்றை தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் சலுகை என்பது மாற வேண்டும்.

***

'ஆல மரத்தடியில் ஆருடம் பார்ப்பவர் யாராவது, அப்படி கூறினரா...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்தி, தி.மு.க., வந்து விடும் என்பதால், அதை தடுக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர் இணைந்து, சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரங்களை துாண்டி விட முயற்சிக்கின்றனர்.

***

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் கல்வி அமைச்சர், தங்கம் தென்னரசு அறிக்கை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இன்னும், மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் குறித்த அறிவிப்பை, தமிழக கல்வித் துறை வெளியிடவில்லை. இதனால், உயர் கல்வி மற்றும் பிற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட முடியவில்லை. எனவே, உடனடியாக அந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

***

'தி.மு.க., மீதான இந்த குற்றச்சாட்டுகள், பல காலங்களுக்கு தொடரும் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை: நில அபகரிப்புகளால், மக்களின் நிம்மதியை குலைத்தவர்கள், சைகோ கொலைகள், சரம் சரமாய் படுகொலைகள் என, சட்டம் - ஒழுங்கை சீரழித்தவர்கள், உத்தமர் வேஷம் போடலாமா... பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களை தயாரிப்பதற்கு, தொழிற்சாலை வைத்தும், சண்டித்தனம் செய்யும் ஒருவரை, எம்.எல்.ஏ.,வாக கொண்டிருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X