பொது செய்தி

தமிழ்நாடு

மந்தைவெளி சிவன் கோவில் இடத்தில் திருமண மண்டபம் கட்ட வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகரில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகரில் நுாற்றாண்டு பழமை பெற்ற சிவகாமி அம்மை சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் ஒரே நேரத்தில் 50க்கு மேற்பட்ட திருமணங்கள் என மாதத்தில் குறைந்தபட்சம் 500 திருமணங்களுக்கு மேல் நடைபெறும்.முகூர்த்த நாட்களில் கோவிலுக்குள் இடம் பற்றாக்குறை காரணமாக திருமண கோஷ்டியினர் மற்றும் பக்தர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்படுவதுடன் பல நேரங்களில் திருமணத்திற்கு செல்பவர்கள் மணமக்களை தேடும் நிலை ஏற்படும்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் கோவிலுக்கு பயன்படாமல் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. இந்த சொத்துக்களை பலரும் நீண்ட கால குத்தகைக்கு எடுத்து ஆதாயமடைந்து வருகின்றனர்.அதன்படி, சிவன் கோவிலுக்கு அருகிலேயே நகரின் மையப்பகுதியான மந்தைவெளியில் கோவிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆஸ்பெஸ்டாஷ் ஷீட் வேயப்பட்டு தற்காலிக முறையில் குடியிருப்புக்கு என குறைந்த வாடகையில் பல ஆண்டுகளாக ரைஸ் மில் நடத்தப்பட்டு வருகிறது.வாடகையும் சரியாக கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.எனவே, கோவிலுக்கு எந்தவொரு பயனுமின்றி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு திருமண மண்டபம் கட்டினால் கோவிலுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே இதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X