அரசுப் பள்ளி வளாகத்தில் புதர் பரிசோதனைக்கு வருவோர் அச்சம்| Dinamalar

அரசுப் பள்ளி வளாகத்தில் புதர் பரிசோதனைக்கு வருவோர் அச்சம்

Added : ஜூலை 24, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் புதர் மண்டியுள்ளதால் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் அச்சமடைகின்றனர்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மட்டுமின்றி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகம், ஆரம்ப சுகாதார மையம் ஆகியவை கொரோனா பரிசோதனை முகாம்களாக செயல்படுகின்றன. இதில் நேப்பால் தெரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிது.ஏரிக்கரையோரம் உள்ள இப்பள்ளி வளாகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொள்கின்றனர். சோதனை செய்து கொள்ள வருவோர் போதிய இடைவெளியுடன் நிற்க வைக்கப்படுவதால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.இதில் பள்ளி வளாகத்தின் பெரும்பகுதிகளில் புற்கள் முளைத்து புதர் மண்டிக் கிடப்பதால் அங்கு காத்திருப்பவர்கள் விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படுமோ எனும் அச்சமடைந்துள்ளனர்.எனவே சுகாதார பணிகள் துறை சார்பில் நடந்து வரும் பரிசோதனை மையத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் புதர்களை அகற்றிட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X