பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஜூலை 25, 1939


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கீழ்சிவிறி கிராமத்தில், 1939 ஜூலை, 25ம் தேதி பிறந்தவர், ராமதாஸ். மருத்துவம் படித்து முடித்தவர், திண்டிவனத்திலேயே அரசு மருத்துவரானார். மூன்றே ஆண்டுகளில், அரசு வேலையை உதறி, தனியாக கிளினிக் வைத்து, 3 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

கல்வி,- வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு கேட்டு, வன்னியர் சங்கத்தை துவக்கினார். அவர் நடத்திய போராட்டம் காரணமாக, தமிழகம் ஸ்தம்பித்தது; 21 பேர் பலியாயினர். இதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியை துவக்கினார். மத்திய அமைச்சரவையில், பா.ம.க., இடம்பெற்றது.

பா.ம.க.,வின் நாளிதழ், 'டிவி' என அனைத்தும், தமிழ் பேசும். சமச்சீர் கல்வித் திட்டம், 'டாஸ்மாக்' கடை திறந்திருக்கும் நேரத்தை குறைத்தது உள்பட, பல நல்ல விஷயங்களை, தன் அரசியல் போராட்டங்களால் சாதித்தார். தமிழக அரசியல்வாதிகளில், இவரது அறிக்கை தான், அறிவுபூர்வமாக இருக்கும்.

பா.ம.க., நிறுவனர், டாக்டர் ராமதாஸ் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X